மே 21-ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2014

மே 21-ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு.


மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட்டு விண்ணப்பதார்களுக்கு
ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்வுதேதி மே 21-ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரிலும் இத்தேர்வு நடக்கிறது.

இத் தேர்வுக்கு 4, 600க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு என்பதால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்பதோடு, தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையும் வழங்கப்படுகிறது. இதனால் இந்த தேர்வில் 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

21 comments:

  1. history major TET 2013 Share your weightage and TET Mark my number 8438978585[only history student only please]

    ReplyDelete
  2. Hai sir anoda tet mark 98 my wtg marks 69.

    ReplyDelete
    Replies
    1. when will release paper 2 CV call letter......

      Delete
    2. After ELECTION thaan varumpol theriyuthu nobody news will confirm.
      Don't worry Sir. Wait Pannuvom ELAAM NANMAIKE endru.

      Delete
  3. intha RELAXATION Correct Exam ku munnadi arivipathu anaivarukum nanmai.
    2013 RELAXATION yaarukum illama kinatril potta kal maathiri irruku.
    VETRI PETRAVARIN "VIDIYAL YENDRU VIDIYUMO"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. Tet paper 2 maths pass pannuna ellarukum vealai keadaikuma

    ReplyDelete
    Replies
    1. mr. kavi it is very very difficult to get a job for all maths candidates. More competition for maths candidates. Now, due to relaxation in pass mark very tough competition for maths subjects. So, after all judgement we can guess. Till then we get confusion.

      Delete
    2. Evalo weitage eruntha maths subjectku velai kidaikum pa?

      Delete
  5. Dear Chemistry TET Candidate

    Please enter ur wt.age, DOB and Dt. in th
    given blog

    http://tntetchemis.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. when will release paper 2 CV call letter......

      Delete
    2. Thangamani sir,
      inum paper 2 cv call letter podalai. potal kandipa inform paniduvanga namma frnds. so dont worry sir. i m also expecting that sr

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  6. ஏப்ரல் 8: வந்தே மாதரம் எனும் எழுச்சி கீதத்தை இயற்றிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்களின் நினைவு தினம் இன்று

    (சாட்டர்ஜி என்றும் குறிப்பர் ;ஆங்கிலேயருக்கு வாயில் சட்டோபாத்யாயா, பண்டோபாத்யாயா முதலியவை நுழையாததால் சாட்டர்ஜி, பானர்ஜி என அழைக்க ஆரம்பித்தார்கள் ). ஆங்கிலேய அரசில் அதிகாரியாக இருந்த பொழுது பங்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்களுக்கு சேவகம் செய்வதை நண்பர் ஒருவர் "பங்கிம் என்றால் வளைந்த என்று அர்த்தம் .அதற்கு ஏற்றார் போல வளைந்த சிந்தனை கொண்டு அவர்களுக்கு சேவகம் புரிகிறாயே ?" எனக்கேட்டதும் பங்கிம் சந்திரர் ஆங்கிலேயருக்கு எதிராக சன்யாசிகள் நடத்திய சன்யாசி புரட்சியை கொண்டு ஆனந்த மடம் நாவலை கட்டமைத்தார் .

    அதில் வந்தே மாதரம் பாடல் இடம்பிடித்தது .காங்கிரஸ் கூட்டத்தில் 1896 இல் தாகூர் இப்பாடலை பாடினார் ;காமா இந்திய தேசியக்கொடியை வடிவமைத்த பொழுது நடுவே வந்தே மாதரம் எனும் வரிகள் இடம் பெறுமாறு செய்தார் . வங்கப்பிரிவினை ஏற்பட்ட பொழுது மக்கள் ஹூக்ளி நதியில் மூழ்கியபடி கூட்டம் கூட்டமாக உணர்ச்சி பெருக்கோடு வந்தே மாதரம் பாடலை ஒரு சேர பாடினார்கள் .அப்பாடலை பாட ஆங்கிலேய அரசு தடைவிதித்தது . இப்பாடலின் முதல் இரண்டு பத்திகளில் சிக்கலில்லை ;அதற்கடுத்த பத்தியில் இந்திய திருநாட்டை துர்கையோடு ஒப்பிட்டு பாடல் இயற்றப்பட்டதால் எல்லாரும் ஏற்கும் பாடலாக இது மாறுவதை தடை செய்தது .

    1908 இல் நடந்த முஸ்லீம் மாநாட்டில் இப்பாடலை பாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .1923-ம் ஆண்டு காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், விஷ்ணு திகம்பர் 'வந்தே மாதரம்’ பாடலைப் பாட முயன்றார். அப்போது, காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவராக இருந்த மௌலானா முஹம்மது அலி, இந்தப் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது, அதனால் இந்தப் பாடலைப் பாட அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார் தாகூர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் உருவ வழிபாட்டை கொண்டிராத பிற மதத்தவர் இப்பாடலால் புண்படுவர் என எச்சரித்தார் .

    காந்தியும் எல்லாருக்குமான தேசம் இந்தியா என உறுதியாக சொன்னார். தேசிய கீதமாக ஜன கண மன ஆனது . வந்தே மாதரம் தேசியப்பாடலாக முதல் இரு பத்திகளோடு ஏற்கப்பட்டது .பி பி சி நடத்திய கருத்துகணிப்பில் உலகின் தலைசிறந்த பாடல்களில் இரண்டாம் இடத்தை இப்பாடல் வென்றது . வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணே வணக்கம் எனப்பொருள். அப்பாடலின் முதல் இரு பத்திகளின் மொழிபெயர்ப்பு :

    அன்னையே வணங்குகிறோம்

    இனிய நீர்

    இன்சுவைக்கனிகள்

    தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

    மரகதப்பச்சை வயல்களின் மாட்சிமை

    தாங்கிய எங்கள் தாயே

    உன்னை வணங்குகிறோம்

    வெண்மதியின் ஒளி பொழிந்திடும் இரவுகள்

    இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

    எழில்மிகு புன்னகை

    இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

    நிறைந்த எங்கள் தாயே

    சுகமளிப்பவளே

    வரமருள்பவளே

    உன்னை வணங்குகிறோம்

    ReplyDelete
    Replies
    1. Sri sir,
      When will the TRB announce vacancy list?

      Delete
    2. Vanda matharam very good job thank u sir sir

      Delete
  7. பக்கிம் சந்திர சட்டர்ஜி இராமகிருஷ்ணபரமகம்சர் பூசாரியாக இருந்த காளி கோவிலுக்கு சென்ற போது அங்கு இராமகிருஷ்ணபரமகம்சர் பக்கிம் சந்திர சட்டர்ஜி யை வலைந்த சூரியனே என்றழைத்தார் . அப்போது தான் பக்கிம் உணர்ந்தார் தாம் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருப்பதை.

    ReplyDelete
  8. டெட் தொடர்பான வழக்குகள் நாளையாவது அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் .

    ReplyDelete
  9. hai history friend please share your TET Weightage mark and TET Mark please contact 8438978585[only history major please.]any body knows how many passed above 90 and 82 to 89 please tell me your observation.

    ReplyDelete
  10. total candidate (5300) above 90 - 2300 candidates, 82-89 - 3002 candidates (inf. approx.)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி