குரூப் 4 தேர்வு கலந்தாய்வு தொடக்கம், இதில் 348 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2014

குரூப் 4 தேர்வு கலந்தாய்வு தொடக்கம், இதில் 348 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.


டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
இதில் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு கடிதத்தை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் வழங்கி கலந்தாய்வைத் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் 348 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.இளநிலை உதவியாளர் பணிக்கு மொத்தம் 3 ஆயிரத்து 704 இடங்களுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது.இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வுக்கு பின், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

1 comment:

  1. அப்போ பணிநியமன ஆணை எப்பொழுது வழங்கப்படும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி