தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான 2வது கட்ட பயிற்சி வேலூர் மாவட்டத்தில் இன்று (13.04.2014) நடைபெற்றது.
இதற்கான ஆணை இரண்டு நாட்களுக்குமுன் வழங்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பயிற்சி நடைபெற்றது. இந்த 2ம் கட்ட பயிற்சி பெற சுமார் 5மணி நேரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும் சிரம்மத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.ஆனால் கடந்த மாதம் தமிழக தேர்தல் ஆணையர் திரு.பிரவீண் குமார் அளித்த பேட்டியில், பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிகள் பின்பற்றாமல் ஆணை வழங்கப்பட்டிருப்பதுபெரும் ஏமாற்றமளிக்கிறது என்று பெண் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரக்கோணம், காவேரிப்பாக்கம், ஆற்காடு மற்றும் திமிரி ஒன்றியத்தில் பணிபுரிபவர்களுக்கு திருப்பத்தூர், நாட்றாம்பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் தேர்தல் நடைபெறுவதற்கு முன் நாளும் தேர்தல் நடைபெறும் நாளன்றும் எங்கு சென்று பணிபுரிய போகிறோம் என்று இப்பொழுதே புலம்ப ஆரம்பித்தவிட்டனர். அதேபோல் தலைமையாசிரியர்களுக்கு போன்ற பணியிடங்களும், புதிதாக நியமனம் பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு ஆகவும் நியமித்து உள்ளனர். இக்குறைகளை பரிசீலித்து அனைவருக்கும் அவர்கள் பணிபுரியும் இடத்திலிருந்து 2மணி நேரத்திற்குள்ளாக நியமிக்கப்பட்டால் ஆசிரியர்கள் நிம்மதியடைவார்கள். இதை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி