கல்வித்துறை - கட்சிகளும் வாக்குறுதிகளும்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2014

கல்வித்துறை - கட்சிகளும் வாக்குறுதிகளும்...


உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே கல்விக்காக இந்தியா தற்போது செலவழிக்கிறது.
தொடக்கக் கல்வியில் 100 சதவீத மாணவர்கள் சேர்ந்தாலும், அதை முடிக்கும் முன்பே 40 சதவீத மாணவர்கள் நின்று விடுகின்றனர். எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கல்வி முறை தரமாக இல்லை.

காங்கிரஸ் மேல்நிலைக் கல்வியில் அதிகமானோர் சேர வழி செய்யப்படும். மாணவர்கள் இடையில் நிற்பது தடுக்கப்படும். கல்லூரிகள், பல்கலைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனி திட்டம் கொண்டு வரப்படும். உயர்கல்வியில் முதலீடுகள் அதிகரிக்கப்படும். கல்லூரிகளில் கல்வியின் தரத்தை கண்காணிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.பா.ஜ., "அனைவருக்கும் கல்வி' திட்டம் சிறப்பாக செயல்பட, தணிக்கை செய்யப்படும். காலத்திற்கேற்ற மாறங்ஙகள் செய்யப்பட்டு, இத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனித் திட்டங்கள்செயல்படுத்தப்படும். கிராமம், பழங்குடியினர் பகுதிகளும் பயன்பெறும் வகையில் உலகத்தரத்திற்கு பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்படும். யு.ஜி.சி., மேம்படுத்தப்பட்டு, உயர்கல்வி கமிஷனாக மாற்றப்படும்.மார்க்சிஸ்ட் உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம், கல்விக்கு ஒதுக்கப்படும். கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டு,பள்ளி இடைநிற்றல் குறைக்கப்படும். கல்வித் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்படாது. வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் உள்ளே நுழைய வழி தரப்பட மாட்டாது.
மற்றவை: தி.மு.க., உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 7 சதவீதம் ஒதுக்கப்படும்.

ஆம்ஆத்மி டில்லி பல்கலையின் 4 ஆண்டு படிப்பு நிறுத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி