ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’


உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்புவரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மார்க்)ஆகும். அதன்படி, தகுதித்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சுமார் 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவுசெய்திருந்தது. தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண், பட்டப் படிப்பு மதிப்பெண், பி.எட். மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு, பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப் படிப்பு மதிப்பெண்) அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும்குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட மதிப்பெண் சதவீதம் முதல் குறிப்பிட்ட சதவீதம் வரை குறிப்பிட்ட மார்க் நிர்ணயிக்கப்பட்டு அதன்படி கட் ஆப் மதிப்பெண் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு அதன் அடிப்படை யிலேயே 27 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது.

மதிப்பெண் சலுகை

இதற்கிடையே, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் தேர்ச்சி 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக (150-க்கு 82 மார்க்) குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. 5 சதவீத மதிப்பெண் சலுகையால் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது.இதற்கிடையே, கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21 ஆயிரம் பேருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான (சுமார் 25 ஆயிரம் பேர்) சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

புதிய கட் ஆப் மார்க்

இந்நிலையில், தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பெண்ணுக்கு ஏற்ப கட் ஆப்

இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள்.

58 comments:

  1. Nirvaka thiramai kuraive intha pirachanaiku karanam

    ReplyDelete
    Replies
    1. நியாயமான தீர்ப்பு . அனைவருக்குமே weightage
      குறைந்துள்ளது.இதில் ஏற்கனவே 90‍‍_ 95 மற்றும் 105_ 110 மதிப்பெண்கள் பெற்று
      weightage
      அதிகமாக இருந்தவர்களுக்கு weightage
      மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது. 82_ 89 மதிப்பெண்கள் பெற்றவர்கள் +2, டிகிரி,பிஎட் ஆகியவற்றில் மிக அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருந்தால் மட்டுமே weightage
      அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
      மற்றபடி பொதுவாக கணக்கிட்டுப்பார்த்தல் அனைவருக்கும் பெரிய பாதிப்பு வராது. ஆல் த பெஸ்ட்.

      Delete
  2. My weightage 64.5 maths mbc.dob 1990 any chanz to get job?

    ReplyDelete
  3. English-la yethana post podalam...?

    ReplyDelete
  4. Is anybody know the vacancy of English teacher?

    ReplyDelete
  5. Is vacancy 24000 ah........... anyone known tell me..............

    ReplyDelete
  6. this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage is 68.5 New .but old is 80 .any chance to get POSTING NOW .

    ReplyDelete
  7. Thangamani sir vacancy 24000 nu yaru sir sonnanga

    ReplyDelete
  8. MR. mani arasan this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage 68.5 new. any chance to me.

    ReplyDelete
    Replies
    1. நல்ல weightage தான் sir

      Delete
    2. Maniyarasan sir tamil medium claime panna enna benifit vilakkama solunga pls

      Delete
    3. Maniyarasan sir tamil medium claime panna enna benifit vilakkama solunga pls

      Delete
    4. அவர்களுக்கு என் 20 % இட ஒதுக்கீடு தரப்படுகிறது.

      Delete
  9. Thangamani sir vacancy 24000 nu yaru sir sonnanga

    ReplyDelete
  10. My weightage 65.07 maths mbc .any chance to get job?

    ReplyDelete
  11. +2 மதிப்பெண்ணையும் டிகிரி மதிப்பெண்ணையும் இப்போது எந்த வகையில் நியாயம்? ஐ ஏ ஸ் தேர்வில் கூட இதை கணக்கில் எடுப்பதில்லை......கொடுமைடா சாமி......

    ReplyDelete
  12. My wt 64.72 english mbc.... dob 1992 any chance for me/

    ReplyDelete
  13. amil med maths maj 61.49 bc job keadaikuma. Tamil med pathe any mews iruntha solunga

    ReplyDelete
  14. amil med maths maj 61.49 bc job keadaikuma. Tamil med pathe any mews iruntha solunga

    ReplyDelete
  15. Tamil med maths maj 61.49 bc job keadaikuma. Tamil med pathe any news iruntha solunga

    ReplyDelete
  16. Maniyarasan sir. Paper 1 , wtg 67.4, SCA, any chance to me

    ReplyDelete
  17. Maniyarasan sir. Paper 1 , wtg 67.4, SCA, any chance to me

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Vellore. Weightage 64.5 maths mbc. Dob 1990.any chanz

    ReplyDelete
  20. ARUN Physics old 74 New 63.87 mbc Tamil medium vellore

    ReplyDelete
    Replies
    1. Am also tm. Physics vellore. 9944365674, 64.80 BC

      Delete
  21. ARUN anybody tell me can I get job

    ReplyDelete
  22. lavanya arociyasamy mam unga frnd old weightage 81 ah or new weightage 81 ah clear me mam. old weightagela 80 ku mela vanginavanga elam 75 kulla varanga so clear us mam

    ReplyDelete
  23. Friends, see dinamalar paper today vellore edition....
    பள்ளிப்படிப்புக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்ெபண் கைவிடப்படும்...இருந்தும் ஆலோசனை கூட்டத்தில் தான் இறுதி செய்யப்படும்...

    ReplyDelete
  24. Friends, see dinamalar paper today vellore edition....
    பள்ளிப்படிப்புக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்ெபண் கைவிடப்படும்...இருந்தும் ஆலோசனை கூட்டத்தில் தான் இறுதி செய்யப்படும்...

    ReplyDelete
  25. Its really good decgtion. Tet mark basic la ye posting podajam

    ReplyDelete
  26. P1-74.45 P2- 66.25 eng sc chance iruka

    ReplyDelete
  27. ungaluku papper 1 sure job 100%

    ReplyDelete
    Replies
    1. Thala chemistry wet 60.44/mbc/1988 job kidaikka vaippu erukka

      Delete
  28. my weightage 68.35 OC chance irukka?

    ReplyDelete
  29. Sir my new weight is 61.71 . My community BC, my major PHYSICS,and i have tamil medium preference. can i get job?

    ReplyDelete
  30. tet exam minimum mak to pass here or not.tet mark also calculated with percentage only ah.any mark in tet exam means also no problem ah . any one reply to me ok

    ReplyDelete
  31. Govt. eppadi mudivu eduthalum oru sila perukku paathippu erppadathan seyyum ellorukkum sadhakamaka yaralum mudivu edukka mudiathu

    ReplyDelete
  32. new weightage is very accurite method. thanks fo god. my old weightage is 76 new weight is 73.30 paper 1 mbc tet 102. male any chance for meme

    ReplyDelete
  33. paper 1 how many vacant? anybody tell me

    ReplyDelete
  34. MSL 68.17 TAMIL,. MBC., 21-2-1980 ANY CHANCE TO GET THE JOB ?

    ReplyDelete
  35. hi my new weightage is 72.46 .. i am an maths candidate... is it possible to get the job? what about the chances for the maths candidates?

    ReplyDelete
  36. Sir en new weightage 63.71-sc ..paper 1.......job kedaika chance iruka

    ReplyDelete
  37. My new weightage 63.71....sc..paper1.....d.o.b 1.6.89, any chance to get the job pls reply.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி