மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2014

மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு


ஆர்.எம்.எஸ்.ஏ., (அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) சார்பில், பத்தாம் வகுப்புக்கு செல்லும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
"ஆல் பாஸ்' முறையில், ஒன்பதாம் வகுப்பு வரை வரும் மாணவர்களில் சிலர், படிப்பில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர். தமிழ் மொழியில் எழுதுவதும், படிப்பதும், அவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் அவர்கள், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை சந்திக்க பயந்து, படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.

இதை தவிர்க்க, ஒன்பதாம் வகுப்பிலேயே, படிப்பில் மிக பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது தனிகவனம் செலுத்தி, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 151 மையங்களில், 4,048 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் முன்னறி தேர்வு நடத் தப்பட்டது. இன்னும்ஒரு வாரத்தில் அம்மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. விடைத்தாள்மதிப்பீட்டை கொண்டு, கல்வித்தரம் அறியப்படும். பத்தாம் வகுப்பில், எளிதில் அவர்கள் தேர்ச்சி பெற, இத்தேர்வு ஊக்குவிப்பதாய் அமையும், என, ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி