பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள்.


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. 12ம் தேதிக்குள் திருத்தி முடிக்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிந்தன. இதற்கிடையே 21ம் தேதியே தமிழகம் முழுவதும் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை தேர்வு அதிகாரிகள் தொடங்கினர். 24ம் தேதி துணைத் தேர்வர்கள் திருத்ததொடங்கினர். அதில் தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.இன்றும் நாளையும் முதன்மை தேர்வர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் திருத்துகின்றனர். 3ம் தேதி துணைத் தேர்வர்கள் திருத்த தொடங்குகின்றனர். வணிகவியல் பாடத்துக்கான விடைத்தாள்கள் அதிகம் இருப்பதால் முன்கூட்டியே அவற்றை திருத்தும் பணிகள் தொடங்கிவிட்டன.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாட விடைத்தாள்களும் 10ம் தேதிக்குள் திருத்தி முடிக்கவேண்டும். திருத்திய விடைத்தாள்களுக்கான மதிப்பெண்களை டம்மி எண்களின்படி பட்டியல் தயாரித்து 12ம் தேதிக்குள் தேர்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.12ம் தேதியுடன் திருத்தும் மையங் களையும் மூட வேண்டும் என்றும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக 40 ஆயிரம் ஆசிரியர்கள் முழு வீச்சில் விடைத்தாள் திருத்தும் பணியில் இன்று முதல் இறங்குகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி