செவ்வாயை நோக்கிய பாதையில் பாதி தொலைவை கடந்த மங்கள்யான் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2014

செவ்வாயை நோக்கிய பாதையில் பாதி தொலைவை கடந்த மங்கள்யான்


செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பாதையில் மங்கள்யான் விண்கலம் பாதி தொலைவைக் கடந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்(இஸ்ரோ) அறிவித்துள்ளது.


                                     

பாதி தொலைவான 33.7 கோடி கிலோமீட்டரை புதன்கிழமை (ஏப்ரல் 9) காலை 9.50 மணிக்கு மங்கள்யான் கடந்தது. இப்போது இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துக்கும், மங்கள்யானுக்கும் தகவல் பரிமாற்றத்துக்கு 4 நிமிஷங்கள் 15 விநாடிகள் வரை தாமதம் ஆவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மங்கள்யான் விண்கலம் இப்போது சீரான நிலையில் உள்ளது. அதில் உள்ள கருவிகளில் அவ்வப்போது சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், அதன் பாதை மாற்றும் திட்டம் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்படும். விண்கலம் மிக நீண்ட தொலைவு பயணித்துள்ளதால், தகவல் தொடர்புக்காக விரைவில் அதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டெனாக்கள் இயக்கப்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் டிசம்பர் 1-ஆம் தேதி செலுத்தப்பட்டது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி