இந்திய பெருங்கடலில் துடிப்பு சிக்னல்: சீன ரோந்து கப்பல் கண்டுபிடித்தது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2014

இந்திய பெருங்கடலில் துடிப்பு சிக்னல்: சீன ரோந்து கப்பல் கண்டுபிடித்தது!

 இந்தியப் பெருங்கடலில் துடிப்பு சிக்னல் கிடைத்துள்ளதாக மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன ரோந்து கப்பல் கண்டுபிடித்துள்ளது.


                        
மாயமான மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேடும் பணியில் சீனாவின் ரோந்து கப்பலான ஹாய்சுன்-01 ஈடுபட்டிருந்தது. அப்போது, கடலுக்கடியிலிருந்து துடிப்பு சமிக்ஞை (பல்ஸ் சிக்னல்) கிடைத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட இந்த ரோந்து கப்பலுக்கு, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் கடலுக்கடியில் இருந்து வினாடிக்கு 37.5 கிலோ ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட துடிப்பு சிக்னல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த சிக்னல், தென் அட்ச ரேகையிலிருந்து 25 டிகிரியிலும், கிழக்கு அட்ச ரேகையிலிருந்து 101 டிகிரியிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து இந்த அளவுக்கு சிக்னல் வெளிப்படும். எனவே, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிக்னல், காணாமல் போன எம்.எச்.370 விமானத்தில் இருந்து வந்ததா? என ஆராயப்பட உள்ளது.

1 comment:

  1. ena science and technology valandhu use,,,,,,,,,,,,konjam yosinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி