கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2014

கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.


நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டம் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து,
இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த மனுவில், ""மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் இல்லாததால், கல்வியின் தரம் தாழ்ந்து வருகிறது.

உரிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளித்து, தேவையான அளவில் அவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்'' எனகோரப்பட்டிருந்தது.இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு, ""மனுவில் குறிப்பிட்டுள்ள தகல்களைக்கொண்டு, கல்வி உரிமைச் சட்டம் மீறப்பட்டு வருவது தெளிவாக புலனாகிறது.மத்திய அரசும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.

2 comments:

  1. VILAKAM ALIKIRATHU THAAN MUDHAL VELAI.
    EPPADI VILAKAM ALIPAANGA PAARUNGA. ELAAM YAMATRUM VELAI THAAN..............!!!!!!!

    ReplyDelete
  2. IS ANYBODY KNOW WHAT IS THE BCM COMMUNAL RANK RUNNING TODAY IN TNPSC GROUP 4 POSTINGS. PLEASE KINDLY UPDATE IT. THANK YOU.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி