ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2014

ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரிய

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஜெயந்தி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:
நான், கடந்த 8.10.2007 அன்று பட்டதாரி ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். 31.3.2014 அன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். கல்வி ஆண்டு முடிவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை முதன்மை கல்வி அதிகாரிக்கு, தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்தார். நான், 10 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்று கூறி எனக்கு பணி நீட்டிப்பு வழங்க முதன்மை கல்வி அதிகாரி மறுத்து 17.2.2014 அன்று உத்தரவிட்டார். இது நியாயமற்றது. எனவே, முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து விட்டு எனக்கு கல்வி ஆண்டு முடிவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-மாணவர்களின் நலன் கருதியே பணி ஓய்வு பெறும் ஆசிரிர்களுக்கு கல்வி ஆண்டு முடிவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றால் 10 ஆண்டுகள் கண்டிப்பாக பணியாற்றி இருக்க வேண்டும் என்பது நியாயமற்றது.கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும். எனவே, மனுதாரரை கல்வி ஆண்டின் இறுதி வரை பணியாற்ற அனுமதி மறுத்த தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவுரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை இந்தக்கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி