தமிழகத்தில் மக்களவை தேர்தல்நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில்தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கவோ, புதிய அறிவிப்புகள்எதனையும் வெளியிடவோ கூடாது என்றும் தேர்தல் ஆணையம்கூறியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது,மேலும் வேட்பாளர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தில்லியிலிருந்து வரும் தேர்தல் பார்வையாளர்களை வேட்பாளர் செலவுக் கணக்கை தணிக்கை செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் 2,518 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்குகளில், மே 16ம் தேதிக்குள் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி