“நோட்டா” பட்டனை பயன்படுத்துவோம்'! பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2014

“நோட்டா” பட்டனை பயன்படுத்துவோம்'! பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு!


தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது.
கூட்ட முடிவில்,
மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் தெரிவித்த மாநில நிர்வாகிகள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆசிரியர் பணி கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளான, 30 ஆயிரம் பட்டதாரிஆசிரியர்களுக்கு, மாநில அரசு தற்போது அறிவித்துள்ள தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம்செய்யவேண்டும்.மத்திய இடைநிலை கல்வித் திட்டத்தில், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.காலிப் பணியிடங்களை நியமனம் செய்யும் போது, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். பள்ளி கல்வித்துறையில், 25 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், லோக்சபா தேர்தலில் சங்க உறுப்பினர்கள் “நோட்டா” பட்டனை பயன்படுத்துவோம், என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நோட்ட என்பது உறுதியாக தவறான ஒன்றாக எனக்கு தோன்றவில்லை நண்பரே....யாருக்கு ஒட்டு போடா விரும்பாமல் இருக்க நினைப்பவர்கள் புறக்கணிக்க நினைப்பவர்களின் ஓட்டை ஒருசிலர் கள்ள ஓட்டாக மாற்றாமல் இருக்க இது உதவும்...ஒரு கட்சியை ஆதரிக்கும் நிலையை விட அங்கு நிற்கும் வேட்பாளர்களில் சிறந்தவர் யார் என்று பார்த்து அவரை ஆதரிக்கும் ஆரோக்கியமான மனநிலை இப்போது உருவாகிக்கொண்டுள்ளது...இது வரவேற்க்கதக்கது...அப்படி நம்பிக்கையுள்ள வேட்பாளர் இல்லாத பட்சத்தில் நோட்ட வை தேர்ந்தெடுப்பதில் தவறொன்றும் இல்லை....

      Delete
    2. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சராசரியாக 15,00,000 வாக்காளர்கள் உள்ளனர்.

      அவர்களில் பட்டதாரி ஆசிரியர்கள் அதிக பட்சம் 5000 கூட தாண்டாது.
      அந்த 5000 பேரும் NOTA வை பயன்படுத்தினாலும் கூட கடுகளவு மாற்றம் கூட ஏற்படாது.

      NOTA என்பது பெயரளவுவுக்குத் தானே ஒழிய அதனால் எந்த பிரதி பலனும் கிடையாது. செய்தியில் வேண்டுமானால் "கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 3000 NOTA வாக்குகள் விழுந்தன" என்பது போன்று வரும் ஆனால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது.

      ஒருவேளை பாண்டிசேரி போன்ற மாநிலத்தில் அதுவும் சட்ட மன்ற தேர்தலின் போது வேண்டுமானால் அத்தி பூத்தாற் போல் மாற்றத்தை நிகழ்த்தலாம்.

      Delete
    3. நண்பரே மற்றம் என்பது இங்கே இரண்டாம் பட்சம் தான்...ஆனால் இங்கேயே ஊழல் தொடங்காமல் இருக்க இதுவே சரியான முறை...யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றாலே அங்குள்ள வேட்பாளர்களின் தரம் பற்றிய வினா எழும்....

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Vote as per your conscience
    Select a right person
    Think and vote
    Its your right to vote
    Don't compel others to do anything.

    ReplyDelete
  4. Nota use panrathu yarukum nanmai ilai so think & vote to right person

    ReplyDelete
  5. பள்ளி கல்வித் துறையில் 25000 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் உள்ளனவா? இது எந்த அளவுக்கு உண்மை?

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால் அந்த 25000 பணியிடங்களும் இந்த கல்வி ஆண்டிலேயே TET இல் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பப் படுமா?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி