தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2014

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி




அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பூங்கொடி(வயது48).அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன்,சசிகலா(22) என்றமகள் உள்ளனர்.பூங்கொடிக்கு வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் பணி வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் தும்பேரி சென்றார். அங்கு நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டார். ஓட்டுப்பதிவு எந்திரங்களை பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் எடுத்து செல்ல நள்ளிரவு ஆனது. இதனையடுத்து வேகமாக பணிகளை முடித்து விட்டு அந்த வாக்குச்சாவடியில் இருந்த அனைவரும் ஊருக்கு செல்ல வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.நள்ளிரவு 1.30 மணிக்கு பூங்கொடி அரக்கோணம் ரெயில்கள் நிற்கும் இடத்துக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை நோக்கி வேகமாக வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் பூங்கொடி மீது மோதியது.ரெயில் என்ஜினீல் சிக்கிய ஆசிரியை உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவரது உடலின் ஒருபகுதி ரெயிலில் தொங்கியபடி சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதனால் ரத்தம்,சதையுமாக அவரது உடல் சிதறியது. இதனை பார்த்து அவருடன் வந்த ஆசிரியர்கள் திடுக்கிட்டு அலறினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியை உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை பூங்கொடியின் மகள் சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 4–ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. பூங்கொடியும் அவரது கணவரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.திருமண மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் பூங்கொடி இறந்ததால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

7 comments:

  1. ஆத்துமா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்

    ReplyDelete
  2. Ivvaraana kodura maranangal thavirthu vaalum manidha vaalvu endru amaiyum???

    ReplyDelete
  3. சகோதரி அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்த்த இரங்கல்கள்

    ReplyDelete
  4. Perumpaalana railway station il R O B, R U B ullathu. Makkal payan padutha virumbuvathu illai. ON DUTY aaga kanakkittu pani palankalai valanga arasu mun vara vendum. Pen aasiriyargalukku paathukaapana idathil election duty valangapadum. Nenaikkave vethanaiyagaum , kodumayagaum ullathu. Pen aasiriyargalai paper thiruthum pani matrum VIRUMBINAAL MATTUM matra panikaluku eedu padutha vendum.
    Antha sagotharien aathma irivanadi sera kadaulai vendukirean.
    Meendum idu pondra KODURA MARANANGAL nadakka vendaam iraivaa.

    ReplyDelete
  5. ஜனநாயக முறையை அமல்படுத்த நடத்தப்படும் தேர்தலிலே ஜனநாயகம் இல்லை என்றால் என்ன செய்வது...அதுவும் இந்த முறை அனைவரும் அறிந்ததே தொலைதூர பணி மட்டுமில்லாமல் ஒரு சில சலுகைகளும் போக்குவரத்து தாங்கும் வசதி போன்றவையும் பெயரளவில் மட்டுமே இருந்தன என்ற புகார்கள் எதனை ஊடகங்களில் வந்தன .. போக்குவரத்து வசதிகளையாவது தேர்தல் அலுவலர்களுக்கு செய்து கொடுத்திருக்கலாமே... ஆனால் ஊடகங்களில் அணைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு நன்முறையில் நடந்தது என்று மட்டும் அறிக்கை கொடுக்க மறப்பதில்லை...

    ReplyDelete
  6. Let us pray for the soul to rest in peace.
    Let God should console the family and the marriage should be conducted as per her wish.

    ReplyDelete
  7. The election process should be revamped and online elections with high internet security should be adapted for next assembly elections.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி