வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத 2241 அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியுமான பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் தனி தொகுதி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குச் சாவடி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட 16,143 அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், புனித தோமையார்மலை உள்ளிட்ட 12 மையங்களில் முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த 3ந்தேதி நடைபெற்றது.
இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி கையாள்வது? வாக்குச் சாவடி மையங்களில் எப்படி பணியாற்றுவது? குறித்து அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டது. இதில் ஆசிரியர்கள் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் 2241 பேர் கலந்து கொள்ளவில்லை.பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மீது விளக்கம் கேட்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி