பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு மிக, மிக எளிமை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2014

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு மிக, மிக எளிமை.


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில்,கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், மிக,மிக எளிமையாக இருந்தன.இதனால்,சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட, 75 சதவீத மதிப்பெண் பெறலாம்,' என மாணவர்கள் கூறினர்.
எஸ்.எம். ஷேக் முகமது ரப்பானி, மாணவர், கே.வி.எஸ். மெட்ரிக்., மேல்நிலை பள்ளி,விருதுநகர்: கேள்விகள் மிக எளிமையாக இருந்ததால், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடிந்தது. 20 நிமிடத்திற்கு முன்னதாகவே, தேர்வு எழுதி முடித்து விட்டேன். ஒவ்வொரு பாடத்தின் பின் பகுதியில் உள்ள கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. 1, 5 மார்க் மற்றும் பொருத்துக பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி,புளூ பிரின்ட் அடிப்படையில் கேட்கப்பட்டிருந்தன. வரைபடத்தில் ஏரியா பெயரை குறிக்க கூறியிருந்தனர். சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட, 75 சதவீத மதிப்பெண் பெறலாம்.பி.இந்து, மாணவி, எஸ்.என்.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்: கேள்விகள், மிக எளிமையாக இருந்தது. புத்தகத்தை நன்கு படித்தாலே, அனைத்து கேள்விகளுக்கும், விடை எழுதிவிடலாம். புத்தகத்தில் உள்ள கேள்விகளும், கடந்த பொது தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளும், இந்த ஆண்டும் கேட்கப்பட்டிருந்தன. நன்றாக படித்த மாணவர்கள், நூற்றுக்கு நூறு எளிமையாக எடுக்கமுடியும். வரைபடத்தில் கேட்கப்பட்டிருந்த இரு கேள்விகளும் எளிமையாக இருந்தன.

எந்த கேள்வியிலும் குழப்பம் இல்லை.எஸ்.லதா, ஆசிரியை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: புத்தகத்தின் பின்பகுதியில் இடம்பெற்ற வினாக்கள் தான் முழுமையாக கேட்கப்பட்டுள்ளன. திருப்புதல் தேர்வு மற்றும் நான்கு ஆண்டு பி.டி.ஏ., வழிகாட்டிகளில் இடம்பெற்ற கேள்விகளே அதிகம் வந்திருந்தன. ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் பகுதி, சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட முழு மதிப்பெண் பெறமுடியும். 'சாய்ஸ்' வினாக்கள் கூட தெரிந்ததாக இருந்ததால், எதை தேர்வு செய்வது என மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். அதிக மாணவர்கள் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி