மாநிலம் முழுவதும் செயல்படும் ஆரம்பப்பள்ளிகளில், 90 சதவீத அடிப்படை பணியாளர்கள் பணியிடம் காலியாகவுள்ளதால், பல்வேறு இடங்களில்,
பள்ளி மாணவர்கள் பணியாளர்களாகும் அவலம் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் 35 ஆயிரத்து 182 ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 32.2 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 1.4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 90 சதவீத பள்ளிகளில் துப்புரவு பணியிடங்கள் இல்லாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. பின், ஓய்வுபெறும் பணியாளர்களின் பணியிடங்கள் நிரப்பாமல் விடப்பட்டு, தற்போது காலிப் பணியிடங்கள் 90 சதவீதமாக அதிகரித்துள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நடுநிலைப் பள்ளிகளில், சமீபத்தில் கோர்ட் உத்தரவின்படி, 40 சதவீத பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மீதம் உள்ள பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாக விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் கண்ணன் கூறியதாவது: பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதுபோல், அடிப்படை பணியாளர்களையும் நியமிப்பது அவசியம். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை ஒப்பிடுகையில், ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பயிலும் இடங்களில் கட்டாயம் அடிப்படை பணியாளர்கள் அவசியம்.பல இடங்களில், மாணவர்கள் வகுப்பறைகள், பள்ளிகளை சுத்தம் செய்வதாக புகார் எழுவதற்கு, பணியாளர்கள் நியமிக்காமல் அலட்சியமாக செயல்படும் அரசே பொறுப்பு. பல பள்ளிகளில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இணைந்து அவர்களின் சொந்த பணத்தில் துப்புரவு பணியாளர்களை நியமித்துள்ளனர்.மாணவர்களை போன்று, ஆசிரியர்களும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும், அடிப்படை பணியாளர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி