தெரிந்து கொள்வோம்: Li-Fi Technology - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2014

தெரிந்து கொள்வோம்: Li-Fi Technology


தொழில்நுட்ப உலகில் Li-Fi Technology குறித்து ஒரு பார்வை,

தொழில்நுட்ப சுருக்கம்:மாறிவரும் இணைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தொழில் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்களில் பாதுகாப்பு என்பது கேள்விகுறியாக உள்ளது.


அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முறை தான் Li- Fi. இதன் செயல்பாடுகள் அனைத்தும் Wi –Fi யை ஒத்திருக்கும். ஆனால் Wi –Fiல் செயல்படுத்தப்படும் hacking சமந்தமான முறைகளுக்கு Li –Fiல் இடமில்லை.இது சாதாரணமான வெளிச்சத்தை பயன்படுத்தி இயங்ககூடியது. இதில் Router மூலமாக பெறப்படும் அனைத்து இணைப்புகளும் வெளிச்சத்தை ஏற்படுத்தும் LED பல்புகளில் இணைக்கப்பட்டிருக்கும்.இணையத்தை பயன்படுத்த இந்த வெளிச்சமானது நாம் பயன்படுத்தும் இணைய கருவியின் மீது விழ வேண்டும். இதன் மூலம் மற்ற தேவையற்றவர்களிடம் இருந்து தனது இணையத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

செயல்படும் விதம்:

LED ஆனது Transmitter போல செயல்படுகிறது. LEDயை நினைத்த நேரத்தில் எளிதில் அணைகவும், ஏற்றவும் முடியும். அணைத்த நிலையில் 0 என்ற signal யையும், ஏற்றப்பட்ட நிலையில் 1 என்ற signalயையும் LED அளிக்கும். 1 என்ற signal தான் காற்றில் பரவி கருவியில் இணைக்கப்பட்டுள்ள photodetectorஎன்னும் கருவி மூலம் இணையத்தை இயக்க பயன்படுகிறது.


Photodetector தனது மீது படும் வெளிச்சத்தை மின்சார சக்தியாக மற்ற பயன்படுகிறது.இதன் மூலம் பெறப்படும் signalன் அளவானது 10,000 -20,000pbs என்ற விகிதத்தில் இருக்கும்.


இந்த ஒளிக்கற்றையானது சிகப்பு, ஊதா மற்றும் பச்சை என ஒரு கலவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.LEDல் இருந்து வரும் ஒளிக்கற்றையின் அளவை பொறுத்து இணையத்தின் வேகம் அமைகிறது. 100MB/s என்ற அளவு வேக திறனை அளிக்கவல்ல அந்த கற்றையானது மனித கண்களால் பார்க்க முடியாத படி அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட முறையினால் பயனாளிகள் பயன்படுத்தும் இணையமானது அதிக இடத்தில் பயன்படுத்தப்பட்டாலும், சிறந்த பாதுகாப்பு திறனை பெற்று விளங்குகிறது.



இதன் பயன்பாடு முற்றிலும் இப்போது இல்லாவிட்டாலும், IEEE 802.15.7 ல் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை முழுமையாக பயன்படுத்த ஆய்வுகளும் நடந்து வருகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி