இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிவிக்க ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2014

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிவிக்க ஏற்பாடு.


ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தைஓட்டுச்சாவடி அலுவலர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என,
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், இம்மாதம் 24ல், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, ஓட்டுப்பதிவு அலுவலர்கள், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், தேர்தல் பார்வையாளர் மட்டும் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்; கலெக்டர் கூட, மொபைல் போன் எடுத்து செல்ல முடியாது. இன்று அல்லது நாளை, வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. இறுதி பட்டியல் வெளியானதும், 'பூத் சிலிப்' அச்சிடும் பணி துவக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து, 8,615 புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி