அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என,
மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.வேலூர், ஆரணி சாலையை சேர்ந்த, வெங்கடேஷ் மனைவி லட்சுமி பிரபா, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:
இழப்பீடு:
அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேருவதற்காக, ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும், 6,500 ரூபாய்க்கான, டி.டி.,யை தபால் மூலம் அனுப்பினேன். ஆனால் அவை பல்கலைக்கழகத்தில் டெலிவரி செய்யப்படவில்லை. தொலைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ரகுபதி, உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு ஏற்கனவே வேலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, முறையீட்டு வழக்காக மாநில தீர்ப்பாயத்துக்கு வந்துள்ளது.
வேலூர் கோர்ட் அளித்த தீர்ப்பில், சற்றே மாற்றம் செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களின் அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர்கள், தமிழக போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆகியோர் இணைந்தோ, தனித்தோ, 8,000 ரூபாயை, இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், ஏற்கனவே மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த, இழப்பீட்டு தொகை, 5,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுத் தொகை, 1,000 ரூபாயை வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி