நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொலைநெறி தொடர்கல்வி மூலம் பயின்று நவம்பர் 2013-தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்
www.msuniv.ac.in என்ற பல்கலை இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக, கூடுதல் தேர்வாணையர் அர.மருதக்குட்டி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது:தேர்வு முடிவுகளை மாணவர்கள் இந்த முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், இதற்குரிய விண்ணப்பத்தைமேற்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அதற்குரிய கட்டணத்தை( தாள் ஒன்றுக்கு ரூ.250) பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்துக் கிளைகளிலும், பவர் ஜோதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு நிதி கணக்கு எண்.32723644186 என்ற எண்ணில் கட்டி, அதற்கான செல்லானை, விண்ணப்ப படிவத்துடன் இணைத்து, தேர்வாணையர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-627 012 என்ற முகவரிக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி