கல்வித்துறை அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.
ஆசிரியர்களின் குறைகளைப் போக்க ஒவ்வொரு கல்விஅலுவலகத்திலும் மாவட்டந் தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊதிய உயர்வு நிலுவைத்தொகை, ஜி.பி.எப். முன்பணம், சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதிய உயர்வு, உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, வீட்டுக்கடன், வாகன கடன், பாஸ்போர்ட் பெற தடையின்மை சான்று (என்.ஓ.சி.) போன்றவற்றைப் பெற தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிப்பது வழக்கம்.இவ்வாறு கல்வித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப் படும் கோப்புகள், மாதக்கணக்கில் தேங்கி விடுவதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். பணம் கொடுத் தால் உடனடியாக வேலை நடப்பதாகவும் ஒவ்வொரு கோப்புக் கும் ஒரு தொகை வசூலிக்கப்படு வதாகவும் கூறுகின்றனர்.
மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ‘கவனித் தால்’தான் வேலையே நடக்கிறது என்று தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலதலைவர் வே.மணிவாசகன் கூறுகையில், “ஆசிரியர்களின் குறைகளைப் போக்க ஒவ்வொரு கல்வி அலுவலகத்திலும் மாவட்டந் தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்றுபள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் தேவராஜன் உத்தரவு பிறப்பித்தார்.அந்த உத்தரவு நடைமுறைப்படுத் தப்படாமலே உள்ளது. மாதந்தோறும் ஆசிரியர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டால், இதுபோன்ற பிரச்சினைகள் ஓரளவு முடிவுக்கு வரும்’’ என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி