கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன் Dinamalar Tea Kadai Bench - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன் Dinamalar Tea Kadai Bench


''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''என்ன ஓய் சொல்ல வர்றீர்... என்ன பிரச்னை...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கடலுார் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள, தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில, தேர்வு நேரத்துல, பிளஸ் 1 மாணவன் ஒருத்தன், வகுப்புல தவறு செஞ்சான்... அந்த அறையில இருந்த ஆசிரியை, அவனைக் கண்டித்தார்... உடனே அவன், அந்த ஆசிரியையை, 'பளார்'ன்னு கன்னத்துல அறைஞ்சுட்டான்...''நிலைகுலைந்த ஆசிரியை, இனி பணி செய்ய முடியாதுன்னு சொல்லி, ராஜினாமா லெட்டர் குடுத்தாங்க... ஆனால், அவரை பள்ளி நிர்வாகம் சமாதானம் செஞ்சுச்சு...

இப்ப அந்தமாணவன் என்ன செய்யிறான் தெரியுமா... பேஸ்புக், மின்னஞ்சல்களில், பள்ளி நிர்வாகத்தைப் பத்தி, கடுமையா விமர்சிச்சிட்டிருக்கான்...''அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அந்த தகவல்களை சேகரித்து வருவதோடு, நடப்பாண்டு முதல், மேல்நிலை வகுப்பு, மாணவர்களையே சேர்க்கக் கூடாதுன்னும், மாணவியருக்கு மட்டும், 'அட்மிஷன்' குடுக்கலாம்ன்னும் முடிவு செஞ்சிடிச்சு... இது போல, மாணவர்கள் நடந்துக்கிட்டாங்கன்னா, மத்த பள்ளிகளும், மாணவர்களைச் சேர்க்க, தயங்குமேங்க...'' என்றுகூறியபடி, கவலை தோய்ந்த முகத்துடன், கிளம்பினார் அந்தோணிசாமி.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!

2 comments:

  1. kelapuda kelapuda thambi enjoyyyy
    ithuku melayathu teacher amaithiya avanga velai ya mattum parpangalaaaa?

    ReplyDelete
  2. ippa ellam teacher controlla illa students but students controlla thaan teachers because all the rules and regulations are favour for students only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி