10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2014

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை.


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.
இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.

வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.

வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

மாவட்டம் தேர்ச்சி /விகிதம் (%) /பள்ளிகளின் எண்ணிக்கை

ஈரோடு 97.88 334

கன்னியாகுமரி 97.78 391

நாமக்கல் 96.58 298

விருதுநகர் 96.55 325

கோயம்பத்தூர் 95.6 502

கிருஷ்ணகிரி 94.58 356

திருப்பூர் 94.38 312

தூத்துக்குடி 94.22 278

சிவகங்கை 93.44 256

சென்னை 93.42 589

மதுரை 93.13 449

ராமநாதபுரம் 93.11 227

கரூர் 92.71 180

ஊட்டி 92.69 177

தஞ்சாவூர் 92.59 390

திருச்சி 92.45 396

பெரம்பலூர் 92.33 124

திருநெல்வேலி 91.98 448

சேலம் 91.89 473

புதுச்சேரி 91.69 279

தர்மபுரி 91.66 285

புதுக்கோட்டை 90.48 295

திண்டுக்கல் 89.84 317

திருவள்ளூர் 89.19 580

காஞ்சிபுரம் 89.17 565

தேனி 87.66 184

வேலூர் 87.35 566

அரியலூர் 84.18 149

திருவாரூர் 84.13 203

கடலூர் 83.71 385

விழுப்புரம் 82.66 534

நாகப்பட்டினம் 82.28 263

திருவண்ணாமலை 77.84 450

1 comment:

  1. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 10 மணிக்கு முன்பே வெளியிட்ட பள்ளிகள்
    -- தின மணி

    இன்று காலை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், தமிழக கல்வித் துறை இயக்குநரகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் இன்று காலை கல்வித்துறை இயக்குநரால் 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் இணையதளத்திலும் வெளியானது.

    பொதுவாக தேர்வு முடிவுகள் அடங்கிய பெட்டிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் காலை 8 மணிக்கே வழங்கப்பட்டு விடும். அரசு முடிவுகளை வெளியிட்ட பிறகு தான் அனைத்துப் பள்ளிகளும் தங்களுக்கான பெட்டிகளை பிரித்து வெளியிட வேண்டும்.

    ஆனால், புதுக்கோட்டையில் உள்ள சில தனியார் பள்ளிகள் காலை 8.30 மணிக்கே தங்களுக்கு வழங்கப்பட்ட கவர்களை பிரித்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால், அப்பகுதியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விவரம் முன்கூட்டியே தெரிய வந்தது. இதேபோல 2 வாரங்களுக்கு முன்பு வெளியான +2 தேர்வு முடிவுகளும் இப்பள்ளிகளில் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி