பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெள்ளிக்கிழமை நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும்எனத் தெரிகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு முடிவுகளைவெளியிட தயார் நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ரகசிய பார்கோடு எண்களின் மூலம்மாணவர்களுக்குரிய மதிப்பெண் அந்தந்த மாணவருக்குரிய பதிவெண்ணுக்கு வழங்கப்பட்டது.
இந்த மதிப்பெண்ணை சரிபார்க்கும் பணிகள் அனைத்தும் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.தமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,422 தேர்வு மையங்களில் 8.78 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர்.மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்:www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.inwww.dge3.tn.nic.inஇதில்www.dge1.tn.nic.inஎன்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் போன் மூலமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்: பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.HSC
Procedure for obtaining plus 2 results by SMSStudents can get their plus 2 results bySMS also. To get results they have to send an SMS in the following format tothe mobile no. 09282232585as follows :TNBOARD
மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதிவரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் நகலைப் பெற மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில விடைத்தாள்களுக்கு தலா ரூ.550-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான கட்டணத்தை மாணவர்கள் விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி