மருத்துவ நுழைவு தேர்வு: தமிழகத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2014

மருத்துவ நுழைவு தேர்வு: தமிழகத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்பு


அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில், 22 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும், மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்கள் மூலம், 3,000எம்.பி.பி.எஸ்., மற்றும், 250 பி.டி. எஸ்., இடங்கள், இந்த நுழைவுத்தேர்வு மூலம் நிரம்புகிறது. நாடு முழுவதும், 50 நகரங்களில், 929 மையங்களில், 5.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில், சென்னையில் அமைக்கப்பட்டிருந்த, 35 தேர்வு மையங்களில், 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வில்பங்கேற்றனர்.சென்னையில், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி