கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் பணி நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் பணி நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு.


நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் (இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) பதவிகளில் காலியிடங்களை நிரப்ப கேந்திரீய வித்யாலயா அமைப்பு
கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தியது.

இந்த நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர், பாடப் பிரிவு, நேர்முகத் தேர்வு நாள் ஆகிய விவரங்கள் கேந்திரீய வித்யாலயா இணையதளத்தில் (www.kvsangathan.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் மே 20-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம்வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம், பயோடேட்டா, உறுதிமொழி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கேந்திரீய வித்யாலயா அமைப்பின் இணை ஆணையர் (நிர்வாகம்) தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி