CBSE தேர்வு முடிவு எஸ்எம்எஸ்-சில் அறியலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

CBSE தேர்வு முடிவு எஸ்எம்எஸ்-சில் அறியலாம்.


மத்திய மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ்2 இறுதித் தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. 10-ம் வகுப்பு இறுதித் தேர்வை 13.28 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
இது கடந்த ஆண்டு எண்ணிக்கையான 12.59 லட்சத்தைவிட 5.5 சதவீதம் அதிகம்.தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்வதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், எஸ் எம்எஸ் மூலமாக முடிவுகளை மாண வர்கள் தெரிந்துகொள்ளலாம்.சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள @cbse10 என்றும் சிபிஎஸ்இ பிளஸ்2 வகுப்பு தேர்வு முடிவுகளைஅறிந்துகொள்ள @cbse12 என்றும் டைப் செய்து 51115 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இணையதள வசதி இல்லாதவர்கள்கூட இந்த சேவை மூலமாக தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். txtWeb நிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது என்று செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி