வகுப்பறையில் ஆசிரியையை குத்திக்கொன்ற மாணவனுக்கு 2 ஆண்டு சிறை- விகடன் செய்தி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2014

வகுப்பறையில் ஆசிரியையை குத்திக்கொன்ற மாணவனுக்கு 2 ஆண்டு சிறை- விகடன் செய்தி..


சென்னை: வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வகுப்பறையில், ஆசிரியை உமா மகேஸ்வரி, 9ஆம் வகுப்பு மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

சென்னை சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மாணவனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாகவும், மாணவனை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், அங்கு மாணவனுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொலை ஏன்?

மாணவர்களை அணுகுவதில் மென்மையானப் போக்கைக் கடைபிடிப்பவர் எனக் கூறப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி, சம்மந்தப்பட்ட மாணவனின் ப்ராகிரஸ் ரிப்போர்ட்டில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் கல்வி நிலை மோசமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ரிமார்க்ஸைக் கண்ட அந்த மாணவனின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டினர். இதனால், கோபமுற்ற மாணவன் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியையை குத்திக்கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது

2 comments:

  1. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு ?????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி