சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2014

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?


இந்த ஆண்டுக்கான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும்26ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு பாடத் திட்டத்தின்படி, பள்ளித் தேர்வுகளை, நாடெங்கிலும், ஒரே மாதிரியாக, சி.பி.எஸ்.இ., நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கி, ஏப்ரல், 17ல் முடிவடைந்தது. 10 கோடியே, 29 லட்சத்து 874 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இது, கடந்த ஆண்டு தேர்வுஎழுதியவர்களின் எண்ணிக்கையோடுஒப்பிடுகையில், 9.32 சதவீதம் அதிகம்.இந்நிலையில், நேற்று டில்லியில், சி.பி.எஸ்.இ., நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. வரும் 16ல், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடலாமா அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடலாமா என, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும், இம்மாதம் 26ல், தேர்வு முடிவுகள்வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி