மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும்: கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2014

மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும்: கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர்


கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் மணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தகம், சீருடைகளை பெற்றுச் செல்லலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களின் கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வடிவேல், மல்லிகா, மெட்ரிக் பள்ளிஆய்வாளர் பிச்சை, சி.இ.ஓ., பி.ஏ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் தலைமை தாங்கி பேசுகையில், "30, 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும். இந்த மூன்று நாட்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்று சீருடை, பாடபுத்தகங்கள், மேலும் பள்ளிகளில் வழங்கப்படும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்'என்றார். மேலும் கூட்டத்தில், பள்ளிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சீரமைக்க வேண்டும். மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதற்கானதேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி