சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2014

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற்கு பதிலளிக்க, பள்ளி கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த, ஏ.வி.பாண்டியன் என்பவர், தாக்கல்செய்த மனு: இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. 2010, ஏப்ரலில், அமலுக்கு வந்த இச்சட்டப்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும், மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும்.அமல்படுத்த முடியவில்லை:அதற்கு, மாநில விதிகளில், உரிய பிரிவுகளை சேர்த்திருக்க வேண்டும். ஆனால், மாநிலவிதிகளில் உரிய பிரிவுகள் இல்லாததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மத்திய சட்டம், விதிகளை அமல்படுத்த முடியவில்லை.

கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்துவதை கண்காணிக்க, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், உரிய அதிகாரியை நியமிக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துஇருந்தது. சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத ஒதுக்கீட்டை நிரப்புவது குறித்தும், உத்தரவிட்டிருந்தது. மாநில அரசைப் பொறுத்தவரை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை, புரிந்துள்ளது. ஆனால், மாநில விதிகளில், உரிய பிரிவுகள் சேர்க்காததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்த முடியவில்லை.

உரிய பிரிவுகள்:

எனவே, இலவச கட்டாய கல்வி சட்டத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமல்படுத்த, உரியபிரிவுகளை கொண்டு வர, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் அருணா ஜெகதீசன், வைத்தியநாதன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன், கல்வி துறை சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.

'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு:

மனுவுக்கு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி