பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2014

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
570 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இதில் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. கலந்தாய்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த சனிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்நாள் அன்றே சுமார் 68 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. வருகிற 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 3-வது வாரம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின்முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது.

இதில், கல்லூரி அமைந் துள்ள இடம், அங்கு செல்வதற் கான போக்குவரத்து வசதி, வழங் கப்படும் படிப்புகள், மொத்த இடங்கள், விடுதி வசதி, உணவு கட்டணம், கல்விக் கட்டணம், சிறுபான்மை கல்லூரி யாக இருந் தால் அதுபற்றிய விவரம் என கல்லூரி தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

4 comments:


  1. நன்றி நன்றி நன்றி .....



    trb ikku ......

    நன்றி நன்றி நன்றி.........


    நன்றி நன்றி நன்றி.............

    ReplyDelete
  2. I AM HAPP..........Y THAT ,,


    TRB PRODUCING NEW WEIGHTAGE SYSTEM, SENIORITY+EXPERIENCE+TET MARKS


    THANKS TO TRB ...........நன்றி நன்றி நன்றி.............

    ReplyDelete
  3. முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை
    ‍‍‍‍-- தின மலர் நாளேடு

    முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம், ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர பாடங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கடந்த வாரம், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்றும், பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்து பேசினர். அப்போது, ''சென்னை உயர்நீதிமன்றத்தில், பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை. ஜூன் மாதம் தான், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்து முடித்து, இறுதி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விபு நய்யார் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து தேர்வர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ReplyDelete
  4. செமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் அவசியமா?
    ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம்
    --- தி இந்து நாளேடு

    ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுத லாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன.
    இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-
    தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியும் எழுதிகொடுக்க வேண்டியதிருக்கலாம்.
    செமஸ்டர் வாரியாக மதிப் பெண் சான்றிதழ்களை சமர்ப் பிக்காத காரணத்திற்காக யாரும் நிராகரிக்கப்பட்டு விடமாட்டார் கள். அதேபோல், சாதி சான்றிதழில் பெயரில் சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் காரணமாக யாரும் நிராகரிக் கப்பட மாட்டார்கள்.
    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி