திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2014

திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு...


கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளைஅரசு தேர்வுத் துறை இணையதளம் www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி