வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரம் இணையதளத்தில் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2014

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரம் இணையதளத்தில் வெளியீடு.


வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 17ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. ஏப்ரல் 15ம் தேதிஇரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்ககால அவகாசம் அளிக்கப்பட்டது. தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்ததால், ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் 2,342 காலி பணியிடங்களுக்கு 9.95 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுக்கு சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்தோர் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா நேற்று வெளியிட்ட அறிக்கை:டி.என்.பி.எஸ்.சி. வருகிற 14ம் தேதி முற்பகல் வி.ஏ.ஓ. பதவிக்கான எழுத்து தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 9.95 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர் விவரம் டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளமானwww.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. விஏஓஅலுவலர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்து கொள்ளலாம்.சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் செலுத்தி அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாரர் பணம் செலுத்தியதற்கான செலுத்து சீட்டின் நகலுடன் விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு 23ம் தேதிக்குள் (நாளைக்குள்) அனுப்பவேண்டும். விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஏஓ தேர்வுக்கு பொது அறிவியலில் இருந்து 75 வினாக்களும், கிராம நிர்வாக நடைமுறைகள் 25 வினாக்களும், திறனறிவு தேர்வுக்கு 20 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொருவினாக்களுக்கும் 1.5 மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்கு தகுதி பெற குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள்பெற வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 comments:

  1. group 4 il meethamulla vacancikalukkana counciling yeppothu?

    ReplyDelete
  2. டைப்பிஸ்ட் கவுன்சிலிங் எப்பன்னு யாருக்கும் தெரியுமா?

    ReplyDelete
  3. Anybody knows about Group3 exam result? Conducted before group4 exam August 3.8.2013 for junior inspector of co-operatives

    ReplyDelete
  4. know the about gr4 typist councelling who is share that new from kalviseithi pl.

    ReplyDelete
  5. group4 la select pannitu innum joining letter varla yeppo varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி