தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறைஅளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2014

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறைஅளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு.


இன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.
அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் குறைத்தீர் முகாம் நடத்தப்படுகிறது.

கடந்தாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கியதால், குறைத்தீர் முகாமில் ஆசிரியர்களால் கலந்துகொள்ள இயலவில்லை. இதனால் வரும் கல்வியாண்டு முதல், முதற் சனிக்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது,அதை உடனடியாக நாட்காட்டி தயாரிக்கும் உதவியாளரிடம் உடனடியாக தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு மாற்றியமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஆங்கில வழிக் கல்வியை நிதியுதவி பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. கடவுச் சீட்டு பெறுவதற்கான அனுமதி நியமன அலுவலருக்கு வழங்கியதை போல், வீட்டு கட்ட முன்பணம் பெறுவதற்கான அனுமதியை நியமன அலுவலரே வழங்க ஏற்பாடுசெய்ய வலியுறுத்தப்பட்டது.

இதற்கான வழிகள் செய்யப்படும் என இயக்குநர் தெரிவித்தார். இச்சந்திப்பின் பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத் தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.

1 comment:

  1. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த 77 ஆயிரம் பேருக்கு சிறப்பு வகுப்பு
    --- தின மலர் நாளேடு

    பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்த, 77 ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

    கடந்த 9ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், 76,973 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். 8.21 லட்சம் பேர் தேர்வெழுதியதில், 7.44 லட்சம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தோல்வி அடைந்த மாணவர்கள், விரைவில், உடனடித் தேர்வை எழுத உள்ளனர். இவர்கள், உடனடி தேர்வில், தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர்வதற்காக, பள்ளி கல்வித்துறை, புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதன்படி, '77 ஆயிரம் பேருக்கும், அவரவர் படித்த பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், கோடை விடுமுறையை ஒட்டி, வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால், எந்த அளவிற்கு, சிறப்பு வகுப்புகள் பயன் தரும் என, தெரியவில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி