தபால் ஓட்டு 1,500 ரூபாய் அரசு ஊழியர்கள் பேரம்? (டீ கடை பெஞ்சு) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

தபால் ஓட்டு 1,500 ரூபாய் அரசு ஊழியர்கள் பேரம்? (டீ கடை பெஞ்சு)


ஓட்டை, 1,000 ரூபாய்க்கு விக்கறா ஓய்...'' என, பேச்சைத் துவக்கினார் குப்பண்ணா.''தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே... பழைய கதையை சொல்றீங்களா பா...'' என்றார் அன்வர்பாய்.
''இது, அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு ஓய்... இந்த தேர்தல்ல, கடலுார் தொகுதியில, ஐந்து முனை போட்டி இருப்பதால, யார் ஜெயிச்சாலும், குறைஞ்ச ஓட்டு வித்தியாசத்துல தான் ஜெயிப்பா... அதனால, அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளை, எப்படியாவது வாங்கிடணும்னு, அரசியல் கட்சியினர், போட்டி போடறா...

''இதனால, அரசு ஊழியர்கள் பலரும், தங்களை நாடி வரும் அரசியல் பிரமுகர்களிடம், 1,000 ரூபாய், 1,500 ரூபாய்னு பேரம் பேச ஆரம்பிச்சுட்டா... இதை தெரிஞ்சுண்டு, இதுவரை தபால் ஓட்டு கிடைக்காத அரசு ஊழியர்களும், தபால் ஓட்டு கேட்டு தேர்தல் அலுவலர்களை நச்சரிக்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி