கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2014

கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி.


தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரீய வித்யாலயாவித்யாலயா பள்ளியில் PGT,TGT,PRT பணிக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும்
04 மற்றும் 05 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணிகள் விவரங்கள்:

1.PGT ஆசிரியர் பணி:

a. English
b. Hindi
c. Economics
d. Physics
e. Mathsf. Computer Science

கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

2.TGT ஆசிரியர் பணி:

a. Hindi
b. Sanskrit
c. Maths
d. Social Science
e. Science

கல்வித்தகுதி:

இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

3.PRT
4. Computer Instructor
5. Coaches for Sports, Music & Dance, Yoga
6. Tamil
7. Doctor
8. Counsellor
9. Nurse

கல்வித்தகுதி:

தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள், அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் எடுத்துக்கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் காலம்:

பணி 1,2 மற்றும் 3 பணியிடங்களுக்கு 04.05.2014 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.பணி 4 முதல் 9 பணியிடங்களுக்கு 05.05.2014 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு http://www.kv2madurai.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி