சத்ரபதி சிவாஜி அவர்கள் நினைவுதினம் இன்று... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2014

சத்ரபதி சிவாஜி அவர்கள் நினைவுதினம் இன்று...




சத்ரபதி சிவாஜி அவர்கள் பற்றிய சில தகவல்கள்..



மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர்சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும்சிறந்த ஆட்சியாளராகவும்நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்துபோர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்திபல கோட்டைகளையும்பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும்வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கிபிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். மேலும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும்சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இத்தகைய வீரமிக்க மாமன்னன்’ சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போர் முறைகளை விரிவாகக் காண்போம்.


பிறப்பு

சத்ரபதி சிவாஜி’ என அழைக்கப்படும் சிவாஜி சகாஜி போஸ்லே அவர்கள்1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் சஹாஜி போஸ்லேவுக்கும்ஜீஜாபாயிக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜிஇளமையிலேயே இராமாயணம்மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார். பிறகு தாதாஜி கொண்ட தேவ் போன்ற சிறப்பு மிக்க நிர்வாகிகள்அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர்வாள் பயிற்சிவில் பயிற்சிகுதிரையேற்றம்யானை ஏற்றம் போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்கினார்.

பேரரசை விரிவுபடுத்துதல்

1645 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்துதோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய அவர்பின்னர் 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும்1656ல் ராய்காட் கோட்டையையும் கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துமராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.

மொகலாயர்களுடன் போர்

1661 ஆம் ஆண்டு கொங்கன் பகுதியில்முகலாய படைதளபதி கர்தாலாப் கானுடன் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி கண்ட அவர்பிறகு சாயிஸ்தாகான் தலைமையில் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து முகலாயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார். 1664 மற்றும் 1670 களில் இரண்டு முறை சூரத்தை தாக்கிகொள்ளையடித்தார். இதனால் சிவாஜியின் வெற்றியைத் தடுக்க தந்திரமான முறையில் ஒரு விருந்தை ஏற்பாடுசெய்து சிவாஜியை கொலைசெய்ய அப்சல் கான் திட்டமிட்டார். ஆனால் அப்சல் கானின் திட்டத்தை அறிந்த சிவாஜிபுலி நகத்தை பயன்படுத்தி தப்பினார். அதன் பிறகு 1670-ல் முகலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர்பல பகுதிகளை கைப்பற்றினார். போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் கொரில்லா போர்” (கொரில்லா போர் முறை என்பது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவது ஆகும்) முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும்பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார்.

சத்ரபதியாக முடிசூட்டிக்கொள்ளுதல்

1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். 1676 ஆம் ஆண்டுதென்னிந்திய பகுதிகளின் மீது தன்னுடைய கவனத்தை திருப்பிய அவர்வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளையும்ஆர்காட்டையும் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

ஆட்சி முறை

சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜிநிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும்ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும்வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற எட்டு அமைச்சர் கொண்ட அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்துஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது. இராணுவப் படைகுதிரைப்படைகடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுமன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல்வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால்சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்.

இறப்பு

சிறந்த ஆட்சியாளராகவும்நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள்இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்.


தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில்சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல்சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும்வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும்ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும்போர்த்திறமையையும்கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

3 comments:

  1. இன்று மே 3 உடன் தொடர்புடைய மேலும் சில நிகழ்வுகள்....

    1494 ல் இதே நாளில் ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.

    1913 ல் இதே நாளில் தான் இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.

    சிவாஜி (பேரரசர்) இந்தியப் பேரரசர் நினைவுதினம்(1680 )

    சாகிர் ஹுசைன், மூன்றாவது இந்தியக் குடியரசுத் தலைவர் நினைவுதினம் இன்று(1969)

    ReplyDelete
  2. I read in a Book Once...

    Shivaji Used to Climb High Forts Using Ropes, ( Malai Eli - Hill Rat -..Special Name )
    After Getting INSIDE the Enemy forts with other Soldiers..
    Shivaji used to Cut all Ropes down...
    Thier Choice would be to Win or Die.. No Escaping thought would be there...Daring Man.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி