ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி; கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2014

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி; கல்வித்துறை அறிவிப்பு.


ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை 2013ம் கல்வியாண்டிற்கான தேர்ச்சி அறிவிப்பது குறித்து தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி கூறியதாவது: ஆறு முதல் எட்டாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு முழு சதவிகித தேர்ச்சியும், ஒன்பதாம்வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் மறுதேர்வு வைக்கப்படும். தேர்வு முடிவுகள் தேர்வு எழுதிய இரு தினங்களுக்குள் வெளியிடப்படும். பிளஸ் 1 தேர்வு எழுத முடியாதவர்கள் மற்றும் தேர்ச்சி அடையாதவர்களுக்கு மறுதேர்வுகள் 9ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது என மாவட்ட கல்வித் துறை அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி