ஆண்டுவிழாவில் வருகிறது புலி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2014

ஆண்டுவிழாவில் வருகிறது புலி?

ஆண்டு விழா என்பது  பொதுவாக பள்ளி ஆண்டு விழா , நினைவுச் சின்னங்களின்  நூற்றாண்டு விழா,பெருந்தலைவர்களின் நூற்றாண்டு விழா என
பலவகையில் கொண்டாடுகிறோம்.அந்த வகையில் கடந்த 2013 இல் TET தேர்வு எழுதிய நாமும் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

ஆமாம். சென்ற ஆண்டு 21/05/2013 அன்றுதான் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.

ஒரு வேறுபாடு என்னவென்றால் மற்றவை எல்லாம் இன்பமயமானாதாக இருக்கும்.ஆனால் நம் ஆண்டு விழாவை அந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியாது.சற்று கனத்த மனநிலையில்தான் இந்த ஓராண்டு காலமாகவே இருக்கிறோம்.

புலி வருது புலி வருது என்று கடந்த 4 மாத  காலமாக பீதி வந்தது. நாளை நமக்கான ஆண்டு விழா.நாளையாவது புலி பூறுமா? sorry சீறுமா?

TET தேர்வு முடிவு வெளிவந்த நாளிலிருந்து இதில் ஏற்பட்டத் திருப்பம்
திகில் திரைப்படத்தில் கூட காணமுடியாது.

நாளொரு  ஒரு வழக்கு, தினம் ஒரு செய்தி-நமக்கோ
இரவும் பகலும் ஆயிரம் கவலைகள்!

இருந்த வேலையையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு
கட்டாந்தரையில் கிடக்கிறோம்!

TET இல் தேரியவர்களை தீண்டத்தகாதவர்கள் போல்
துரத்துகின்றன தனியார் பள்ளிகள்!

காதலித்தேன்(ஆசிரியர் பணி),கைப்பிடித்தேன்(புத்தகம்), ஏன் வெற்றியும் பெற்றேன்.ஆனால்(தமிழ்) ஐயாவாக  முடியவில்லை!

கோயிலுக்கு நேர்த்திக்கடன் இல்லை,மனைவியும் மாசமாக இல்லை,ஏன் மனைவியே இல்லை.ஆனால் தாடி வைத்த கேடியாகிவிட்டேன்!

என் கதை இப்படி என்றால் திருமணமானவர்கள் தெருவுக்கு வந்துவிட்டார்கள்!

பல பேரது தாலி கயிறு சுருக்கு கயிராகவும் இறுக்குகிறது!

பசித்த பிள்ளைக்கு பால் வாங்கவும் காசில்லை!

 எங்கள்  தலை நரைத்து பித்தம் பிடித்து பேயாக மாறினாலும் உங்கள் சித்தம் எங்கள் மேல் விழாது  போலிருக்கிறது!

முதல்வரே உங்களுக்கான  முடிவு இனிப்பாய் முடிந்துள்ளது
 எங்களுக்கான முடிவையும் இனிப்பாய் முடியுங்கள்.

இதை நான் எனது பதிவு அழுத்தம் கொள்ள வேண்டும்
என்பதற்காக சொல்லவில்லை .

அத்தனையும் உண்மை.எனக்கு வந்த மின்னஞ்சல் தகவலின் சாரமிது.

 காதல் கவிதை எழுத வேண்டிய வயதில் என்னை
கல்விக் கவிதை எழுத வைத்துவிட்டீர்களே!

அன்புடன் மணியரசன்.

123 comments:

  1. Replies
    1. 12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே,

      Delete
  2. அருமை..அருமை...இது உண்மையின் வெளிப்பாடு. நன்றி மணி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. 1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
      2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
      3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
      slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல

      Delete
  3. My prediction : 5% relaxation may be given to 2012. That's why everything is getting late.

    ReplyDelete
    Replies
    1. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல

      Delete
  4. What do you think tet friends.? Why G.O late? expecting your comments.

    ReplyDelete
    Replies
    1. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?

      Delete
  5. அப்படியே கொஞ்சம் முகநூல்... ஆனந்த விகடன் மற்று தினசரி செய்திதாள்களின் பக்கமும் அனுப்பிவையுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தலைபிற்கு ஏற்றவாறு ஒரு புகை படத்துடன் பதிவை கொடுங்கள்.. இன்னும் நன்றாக முகநூல பக்கங்களில் சென்றடையும்..

      Delete
    2. பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

      Delete
    3. முயற்சிக்கிறேன் ஸ்ரீ

      Delete
    4. இன்றுடன் ஓராண்டு முடிகிறது என்ற செய்தியை செய்தித்தாள்களுக்கும் காலையில் அனுப்பிஇருந்தேன் நாளை ஏதாவது நம்மை பற்றிய செய்திகள் வருகிறதா என்று பார்க்கலாம்...

      Delete
  6. எனக்கு கோபம் வராது . வந்தா அழுதுடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆதி திராவிட கிறிஸ்தவர்களை பிற்பட்டுத்த பட்டியலில் இருந்து விலக்க கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது . கோரிக்கை ஏற்கப்பட்டால் பிற்பட்டுத்த பட்டியலில் அனைத்து பாடங்களிலும் காலி இடம் ஆதிகரிக்க வாய்ப்பு .

      Delete
  7. yaarum mathikka kooda maatenrinka. thinamum web paarthu paarthu elavu kaatha kiliyaka ullen. enkalai pontra seniorskku thaan daily oru problem. ethai thaan face pannarathu. enthambikku marriage fix akiyiruku. athukku kooda ethum seyya mudiatha nilai. rendu childrens school fees, family expenses, oh! god enakku vantha sothanai entru theerum. etho oru nambikkaiyil en vaazkai. amma avarkale engalathu kanneerai nirutha neengal mattume manthu vaithaal mudiyum.

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நடக்கும்..நம்பிக்கை யை இழக்காதீர்கள்..சகோதரி

      Delete
    2. வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.

      ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
      சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

      Delete
  8. please commenters use only english or tamil

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  9. If government has interest in appointing teachers in June itself, it would have published G.O very soon.

    ReplyDelete
  10. i have one doubt sir, all comments and obligation is can be read the c.m and her ministry.

    ReplyDelete
  11. நம் நிலையின் உண்மையான‌ வெளியீடு

    ReplyDelete
  12. Sir indha tet resulta nambi kadan vangi marriage panniten. Na vangura salary ku vati kata mudiyala seat ku kadan vangi katuren. Wife ku saree kuda vangi kuduka mudiyala indha marriage ana six months la. Sollavum mudiyala mellavum mudiyala. Dhinam dhinam sagura madhira iruku. Epdi irundhalum net pack potu check panren edho nambikai la. Evlo adichaluu thanguvom nan seidha hardwork veenaga pogadhu endra nambikayil. By prabhakaran.

    ReplyDelete
    Replies
    1. வருந்த வேண்டாம் நண்பரே..இனிமையான. எதிர்காலம் நிச்சயமாக. உள்ளது..

      Delete
    2. Thanks brother. Andha nambikai la than nama elarum valurom. Theivathal agadhu eninum muyarchi than mei varutha kooli tharum.

      Delete
  13. அன்பு நண்பர்களே,

    GO வேலை முழுவதும் முடிந்துள்ளது. இன்று மதியம் முதன்மை கல்வி செயலாளர் அவர்கள் தலைமை செயலாளர் மற்றும் முதல்வர் அவர்களிடம் காண்பித்தது உத்தரவு பெற்று விட்டார்

    உயர்நீதிமன்றம் சொன்னதை முழுவதும் பின்பற்றாமல் சிறிது மாற்றங்களுடன் புதிய அரசாணை வர உள்ளது.

    நாளை கண்டிப்பாக அரசாணை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    நான் இன்று பள்ளிக்கு சென்றதால் தகவல் தருவதற்கு காலதாமதம் ஆனாதால் வருந்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. Thanks for your very very happy news.

      Delete
    2. GO expected to publish by tomorrow, k accepted.. But there will be more chances for HC method, because TRB wil not take risk of facing some more cases which wil b filed after GO. Anyways, lets wait n c

      Delete
    3. அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில்,நாளை நமக்கான துன்பம் நீங்கும் விடுதலை நாள்.

      Delete
    4. நன்றி கலை செல்வரே

      Delete
    5. நன்றி நண்பரே..

      Delete
    6. go will come no issue , when they will publish subject and caste wise vacant list ?

      Delete
    7. நன்றி கலை செல்வன் சார்

      Delete
    8. மேடம் அறிவியல் முறைப்படிதான் அரசாணை வரும்.
      ஆனால் உயர்நீதிமன்றம் சொன்னதை முழுவதும் பின்பற்றாமல் சிறிது மாற்றத்துடன் வரும்

      ஆதாவது +2, degree, bed. இதன் மதிப்புகள் 40% இல் குறைய வாய்ப்புகள் உள்ளது 40% பதில் 15% (5+5+5) என்று நினைக்கிறேன்

      Delete
    9. every week trb asking to collect vacant list , this going on from Jan 14 , but not comes to end

      Delete
    10. kalai sir paper 1 ku epdi go varum any idea tell sir

      Delete
    11. 5+5+5 mark na remaining 85 mark tet ku kodupangala sir

      Delete
    12. Crt Kalai & Palani sir....

      Delete
    13. நாளுக்கு நாள் நமது எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது.நாளைக்காவது ஜிஒ வெளியிடுவார்கள் என நம்புவோம்

      Delete
    14. thank u, tomorrow wil v get good news? all is well.

      Delete
    15. Kalai sir, ethu unmaiya....?
      5 5 5 85 endru Vara vaipu ulatha...?
      G.O 2morrow varuma...?

      Delete
  14. மிகவும் நன்றி கலை நண்பரே

    ReplyDelete
  15. All are not only searching their job But also their identity;their respect;their life;their name;their god through tet exam.god must help them-with prayers karthika devi

    ReplyDelete
  16. 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  17. நண்பர் மணி,

    உங்கள் கருத்து அனைவரின் உள்ளதிலும் உள்ளதை தெளிவாக படம்பிடித்து வந்து உள்ளது. இன்னும் பலர் அவர்கள் பிரச்சினைகளை வெளியில் சொல்ல கூட முடியாமல் தவிக்கின்றனர். சிலர் வேலையில் இருந்தாலும் அந்த வேலை அவர்களுக்கு தினமும் மன அழத்ததை கொடுத்து கொண்டு இருக்கும் போது எப்போது இதன் முடிவு தெரியும் என்ற மன உளைச்சல் வேறு

    உங்கள் கட்டுரைக்கு மிகவும் நன்றி !!!!......

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலைச் செல்வன் sir,

      உண்மையில் இன்னும் தெளிவாகவும்,ஆழமாகவும் எழுத எண்ணியிருந்தேன்.ஆனால் நேரமின்மையில் அவசர கதியில் publish பண்ண வேண்டியதாயிற்று.

      அன்னையர் தினம் அன்று, என் அன்னையை நினைத்து சில பத்திகளை எழுதிருந்தேன்.ஆனால் அதை மிகச் சிறப்பாக எழுத வேண்டும் என நினைத்திருந்ததால் கடைசிவரை அதை வெளியிடவே முடியவில்லை.

      Delete
    2. நண்பர் கலை செல்வரே.உங்களது இந்த வார்த்தைகள் என்னை கண்ணீர் விட செய்தது நண்பரே. . .....
      சிலர் வேலையில் இருந்தாலும் அந்த வேலை அவர்களுக்கு தினமும் மன அழத்ததை கொடுத்து கொண்டு இருக்கும் போது எப்போது இதன் முடிவு தெரியும் என்ற மன உளைச்சல் வேறு

      Delete
    3. நண்பர் கலை செல்வரே.உங்களது இந்த வார்த்தைகள் என்னை கண்ணீர் விட செய்தது நண்பரே. . .....
      சிலர் வேலையில் இருந்தாலும் அந்த வேலை அவர்களுக்கு தினமும் மன அழத்ததை கொடுத்து கொண்டு இருக்கும் போது எப்போது இதன் முடிவு தெரியும் என்ற மன உளைச்சல் வேறு

      Delete
    4. நண்பர் ராம் உங்கள் மன அழுத்தம், மன உளைச்சல் இரண்டும் முடியும் காலம் வந்து விட்டது ஜோதிடம் இல்லை உண்மை உண்மை

      Delete
    5. Ram sir, do u think TET 85%,
      +2 5%, B.sc 5% and B.ed 5% wil b the new weightage method in GO which is yet to be published? Wat do u think

      I think academic percentage wil not b converted to such low percentage..

      Delete
    6. கண்டிப்பாக Academic Percentage
      குறைகிறது Anonyms madam

      Delete
    7. Satheesh sir.. i dont think so.. Converting all to 5% each, not gonna make big difference.. Instead they can go by TET marks itslf.. Lets wait and c sir..

      Delete
    8. i think the method will be 70+10+10+10 or 80+10+10 bcoz they should follow ncte rule at the same time they consider above 90...

      Delete
    9. i think the method will be 70+10+10+10 or 80+10+10 bcoz they should follow ncte rule at the same time they consider above 90...

      Delete
    10. Tet exam எழுதிய நண்பர்களில் பலர் நிரந்தர /நிரந்தரமற்ற ஆசிரியரல்லாத பணியில் உள்ளார்கள் .அவர்கள் தன் பணியையும் பார்த்து ;படித்து தேர்ச்சி பெற்று உள்ளனர் .
      இளம் வயதினர் நன்கு முயன்று tet 1& 2 அதிகம் பேர் பணி பெற்று உள்ளனர்.
      முரண்பாடுகள் களைய அரசும் முயலவில்லை . employment seniority கு மதிப்பும் இல்லாமலே போய் விட்டது .

      Delete
  18. Dear Mr Maniarasan.
    Good representation. Thank you very much.

    ReplyDelete
  19. அனைவரது வாழ்விழும் ஒளி ஏற்றுவரா முதல்வர்

    ReplyDelete
  20. அனைவரது வாழ்விழும் ஒளி ஏற்றுவரா முதல்வர்

    ReplyDelete
  21. Happy to hear ur words mr.kalaiselvan and spl thanks to maniarasan....

    ReplyDelete
  22. naalai naalai endra nambikayil mattume ovvoru nalum nagargiradhu iravu vidindhal annaithum kalaidhuvidugiradhu

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை அதை மட்டும் தான் சார் இங்கு பலர் மூலாதாரமாகக் கொண்டு காத்திருக்கிறார்கள் உண்மையில் இவ்வளவு காலதாமதம் ஆன போதும் இன்னும் நம்பிக்கை மட்டும் குறையவில்லை.. சிறு செய்தி கிடைத்தாலும் அதை கொண்டு மீண்டும் நம்பிக்கை பெறுகின்றோம் அது நிஜமோ இல்லை கதையோ... மீண்டும் என்ன செய்ய நாளை வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

      Delete
  23. schsec@tn.gov.in dear frnds send email to sabitha madam request to publish theGo before june bcz school r start pasnkala xhekama naria per irupanka job vittutu irupanka elarukum oru mudivu venumla

    ReplyDelete
  24. oh god itharkku mudive illaiya

    ReplyDelete
  25. Don't worry TET teachers kalam kaniyum neram vanthuvittathu

    ReplyDelete
  26. frns..... expected go will be? there will be 12 marks to be included ? reply anyone..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. +2 undu bt

      +2 ku 5% mark Ug ku 5% mark B.ed ku 5% mark Tet ku 85% mark
      Maximum ipti thaan G O varum pa

      Delete
    3. maximum +2 irukadhu. 80:10:10 this is new g.o. Not confirmed.

      Delete
  27. go பற்றிய நியூஸ் உண்மைதான் ,I confirmed it With concern .மாற்றத்துடன் go வெளிவருகிறது .go நாளையோ அல்லது ஒரு சில தினங்களில். கட்டாயம் வெளிவரும் .

    ReplyDelete
    Replies
    1. SG சார் நிங்கள் confirm செய்தது மிகப்பெரிய இடம் அவருடன் எப்போதும் நிங்கள் தொடர்பில் இருங்கள் நண்பரே

      Delete
    2. கட்டாயம் திரு.கலைசெல்வன் அவர்களே..

      Delete
    3. Raj sir how many vacancies sir paper1?

      Delete
    4. I am trying to get vacancy detail,if I got, I wil publish...

      Delete
  28. கல்விச்செய்தி நண்பர்களே,

    தினமும் பலர் தொலைப்பேசி என்னை கேட்டு மின்னஞ்சல் அனுப்புவதும், weightage ஐ குறிப்பிட்டு தனக்கான வாய்ப்பு எவ்வாறு இருக்கும் என வினவுவதும் ஒருவித தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

    உண்மைநிலை யாருக்குமே தெரியாதிருக்கும் போது எப்படி என்னால் பதிலளிக்க முடியம்?.அவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்தாலும் திமிர் பிடித்தவன் என்ற பிம்பம் என்மேல் திணிக்கப்படும்.ஏதோ ஒரு பதிலை அளித்தாலும் ஜோதிடம் பார்க்க தகுதியானவர் என்றும் சிலர் எழுதுகின்றனர்.

    என் சிற்றறிவுக்கு எட்டியதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.அதை மின்னஞ்சல்,hangout,whatApp,facebook போன்றவற்றின் மூலமே பகிர்ந்து கொள்ளலாம்.
    என் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி

    ReplyDelete
  29. Kalaiselvan sir GO la enna changes irukumnu nenga ethirpakinga pls reply because your thought is almost ..................

    ReplyDelete
    Replies
    1. சார் நான் இன்று பள்ளி செல்லாமல் இருந்து இருந்தால் அரசாணையை மிகவும் தெளிவாக சொல்லி இருப்பேன் ஆனால் எனக்கு தெரியாது எதிர்பார்ப்பு என்று நிங்கள் கேட்பதால் எனக்கு தெரிந்து நமது Acadamic சதவீதம் 40% இல் இருந்து குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது

      Delete
    2. Dear kalai selvan sir pls collect information about p.g trb sir we are also waiting last one year si

      Delete
  30. Dear Mr Maniarasan.
    Good representation. Thank you very much.

    ReplyDelete
  31. my thought is may be given TET 90%.degree 5%. BEd 5%. almost its may issued as GO

    ReplyDelete
    Replies
    1. may be TET 85%, +2 5%, degree 5%, B.ed 5%

      காத்திருப்போம் ஒரிரு நாள் தெரிந்துவிடும் சார்

      Delete
    2. Mr. Kalai selvan do you know anything about TRP PG pl

      Delete
    3. Kalai Sir, Intha seithiyaavathu unmaiyaaga nadanthaall intha thodarku mudivu varum.

      Delete
    4. தெரியவில்லை நண்பரே தெரிந்தால் கண்டிப்பாக தெரிவிக்கிறேன்

      Delete
    5. Kali sir

      Wt.age system there is no change 60%+10%+15%15% confirmed ( yesterday One CEO told)

      Delete
  32. Pls kalai sir tel me about pg status if u know

    ReplyDelete
  33. Pls kalai sir tel me about pg status if u know

    ReplyDelete
  34. Manathin valiyai Mani maniyai solli irukkinreergal maniyarasan sir.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இந்த பாராட்டு என் ஆசிரியரை நினைவு படுத்துகிறது.எனது ஆசிரியரும்,"மணியரசன் அவன் பேருக்கு ஏற்றாற்போல் மணி மணியாக படிக்கிறான்" என பாராட்டுவார்.நன்றி

      Delete
    2. mani sir

      Wt.age system there is no change 60%+10%+15%15% confirmed ( yesterday One CEO told)

      Delete
  35. TET 85%, +2 5%, UG 5%, B.ed 5%

    nanbargalae iedhu anaivarukkum poruthamana muraiyaga irukkum endru ninaikkindren....

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. Thamikal kalai matrum mani iruvarum namadhu thodarbil iruppadhu than tet
    pass seithavarkalukku aaruthalaka ullathu. Thambikalukku very very thanks

    ReplyDelete
  38. VERY GOOD EVENING FRNDS., Mr. Maniarasan sir, ur kavithai is very great for all kind of TET PASSED CANDIDATES. BECAUSE ALL CATEGORY UR KAVITHAI VARI-L MUTHAYPPAI SOLLIVITTEERGAL.
    SPECIAL THANKS TO MR. KALAI SIR., IS IT TRUE ? TET 85%, +2 5%, UG 5%, B.ed 5%
    THAT IS CORRECT METHOD., VERY GREAT DECISION THE GO.,
    HOW TO CONFIRM THE GO KALAI SIR TAKING FROM TRB ? IS IT TRUE = IF IT POSSIBLE UR VERY VERY GREAT SIR. GOOD NEWS FOR ALL. MANY PERSONS KULANDAIKALAI PALLIYIL SERKKAMAL WAITING FOR GO.,

    THANKING YOU MANI AND KALAI SIR. THANKS FOR UR SERVICE.,

    ReplyDelete
    Replies
    1. Mr.velmurugan,
      Weightage ratio splitup is Mr.kalai's guessing only.but GO going to publish soon which is given by Mr.kalai is correct.pls take the information accordingly .fyi pls

      Delete
  39. Thiru Mani sir miga azhagana varigalil arputhamai sonneergal.

    ReplyDelete
  40. சார் GO இப்படி இருக்கலாம் என்று ஒரு மேடம் என் கருத்தை கேட்டதற்கு நான் இப்படி இருக்கலாம் என்று கூறினேன் ஆனால் அதுவே உண்மை இல்லை

    ReplyDelete
  41. There is no words to say Mr Mani sir excellent article.and I say sincere thanks to kalai sir

    ReplyDelete
  42. vazhi mithu vizhi vaithu kathiruthom,kathirukirom, ippavam.......................... enru thirum itha tet thaakam

    ReplyDelete
  43. Tmrw spl tet exam naduku athuku apram tha etha irunthalum velia viduvanka totaly 543 person write tmrw tet so we can wait and see

    ReplyDelete
  44. More tha 5000 perdon write spl tet exam tmre all the best frnds

    ReplyDelete
  45. hi frnds go wil com vry soon.. go on 21st, tentitive weightage list on 23rd, clearification time 4days, final selected list on 30th, councilling on 3rd june to 6th june, order we get on 13th june!! be positive , be cool, and be happy., gud ngt..

    ReplyDelete
    Replies
    1. How do you say sir still not give bt transfer order. So that It is not possible

      Delete
  46. Mani sir,
    Your article was excellent
    You will surely get posting sir.The students those who learn from u r lucky.
    Wish u all success.

    ReplyDelete
  47. hi mani.., nice script.. govt.job not at all very easy now.. so we want to spend more.. namakkum keezhe ullavar kodi ninaitthu parthu nimmathi aagu,!! i wrote more than 50 competative exams atlast i attain my goal at 2012 tntet 1st tet., dnt wry efforts never fail.,
    my best wishes for ur valuable service to our poor students..,

    ReplyDelete
  48. tet exam la kuraivana mark eduthu win panninavangalukku improvement irukkuma?

    ReplyDelete
  49. Wt.age system there is no change 60%+10%+15%15% confirmed ( one yesterday One CEO told)

    ReplyDelete
    Replies
    1. jaya priya madam how to say...... this is true news...........

      Delete
    2. Jaya Priya court weitge change aairukunu 100% news varuthu neenga ipti solringa??

      Delete
  50. yaar solratha nambarathune therilaye!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds

      Delete
  51. nice one!!!! you are convey the true status of all the selected candidates,,,

    ReplyDelete
  52. சூப்பர் சீனியர் சார் தயவுசெய்து சீனியாரிட்டி ku மார்க் வேணும்ன்னு பதிவு செய்யாதிங்க

    ReplyDelete
  53. ஒரு இடத்திற்கு ஆறு லட்சம் பெறப்படுகிறதாம்... இறுதிப்பட்டியலில் குளறுபடி செய்யத்தான் இத்தனை இழுத்தடிப்பா?? ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை.. உங்கள் கண் முன் பணம் கொடுத்தவர் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். ஆசிரிய நண்பர்களே எச்சரிக்கை.. ஏமாந்து விடாதீர்கள்.. கண்ணில் தெரியும் குற்றங்களை முடிந்தவரை தடுக்க முயற்சி எடுங்கள்..

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி