'டான்செட்' தேர்வு முடிவு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2014

'டான்செட்' தேர்வு முடிவு வெளியீடு




எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்திய, பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) முடிவு, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில், முதுகலை 
படிப்புகளில், 8,000த்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில், இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு, கடந்த மார்ச்சில் நடந்தது. எம்.சி.ஏ., - எம்.பி.ஏ.,வுக்கான தேர்வு, மார்ச், 22ம் தேதியும், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச், 23ம் தேதியும் நடந்தது. இரு நாள் நடந்த தேர்வை, 90 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவு, அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள், தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், நுழைவுத்தேர்வு மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி