ஜூனிற்குள் பதவி உயர்வு: ஆசிரியர்கள் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

ஜூனிற்குள் பதவி உயர்வு: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.


மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 'பேனல்' வெளியிடப் பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' விரைவில் நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் பணிமூப்பு அடிப்படையில் 29.1.2000 வரை பணியில் சேர்ந்த 871 பட்டதாரி ஆசிரியர்கள் விவர பட்டியலை பள்ளிக் கல்வித் துறை இரு நாட்களுக்கு முன் வெளியிட்டது. இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் பெயர் விவரம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பட்டியலை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளது. இப்பணியை 15 நாட்களுக்குள் முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.'பேனல்' வெளியீடு குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் முருகன் கூறுகையில், "பட்டியலில் உள்ள உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை விரைவில் அறிவித்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கை, ஜூன் மாதத்திற்குள் நடத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

1 comment:

  1. please consider middle school TRB B.T's.













    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி