கல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் விற்றால் கடைகளுக்கு சீல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2014

கல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் விற்றால் கடைகளுக்கு சீல்.


திருச்சி:கல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் விற்றால் கடை களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சுகாதாரத்துறை இயக்குனரக அதிரடி உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே 100 மீ. சுற்றளவுக்குள் கடந்த 26ம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதுவரை 25க்கும் மேற்பட்ட கடைகளில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான சிகரெட், பீடி மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களான பான்பராக், குட்கா, ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதோடு, உணவு பாதுகாப்பு துறைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.கோடை விடுமுறை என்பதால் மாநகரில் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப் பட்டுள்ளது. சில கல்லூரி கள் மட்டும்தான் திறந்திருக்கிறது.ஜூன் முதல் வாரத்தில் இருந்து 100 மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகள் மற்றும்வணிக வளாகங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட உள்ளது.ஜூன் துவக்கத்தில் சோதனையின்போது புகையிலை விற்கப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி