ஆசிரியர் கல்வியைத் தனியார்மயமாக்குவது கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2014

ஆசிரியர் கல்வியைத் தனியார்மயமாக்குவது கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும்.


ஆசிரியர் கல்வியைத் தனியார்மயமாக்குவது கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும் என்று கல் விக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்வி மேம்பாட்டுக் கூட்டமை ப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:தமிழ்நாட்டில் ஏற்கன வே 657 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்வியா ண்டில் புதிதாக 40 தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்களைத் தொடங்க தமிழக அரசு அனுமதிவழங்க உள் ளது. தமிழ்நாட்டில் தற் போதேசுமார் 10 இலட்சம் பேர்ஆசிரியர் கல்விபடிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போதுள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிக மானோர் ஆசிரியர் கல்விப் படிப்பை முடிக்கின்றனர்.

இவர்களில் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் மட்டுமே தனியார் பள்ளிகளி லும், அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணிவாய்ப்பைப் பெறமுடிகிறது.இந்நிலையில் மேலும் புதிதாக 40 தனியார் ஆசிரி யர் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிப்பது அவசியமற்றது.பெரும்பாலும்வசதி வாய்ப்பற்றவர்களே வங்கிக் கடன் பெற்று ஆசிரியர் கல்விப் படிப்பை படித்து வருகின்றனர்.

இந்தச் சூழ் நிலையில் ஆசிரியர்களுக் கான வேலைவாய்ப்பு மற் றும் தேவையான எண்ணிக் கையினர் பற்றி கவலைகொள்ளாமல் புற்றீசல் போல் இலட்சக்கணக்கில் ஆசிரியர் கல்விப் படிப் பை முடித்தவர்களை உரு வாக்குவது இளையதலைமுறையினரின் எதிர்கால வாழ்க்கையைச்சீரழிக்கும் செயலாகும்.இதன் மூலம் தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துவது, கொத்தடிமை ஆசிரியர் களை உருவாக்குவது போ ன்ற விரும்பத்தகாத நிலை மைகள் ஏற்படும்.

மேலும் தரமானஆசிரியர்களை உரு வாக்கத் தேவையானஆசி ரியர் பயிற்சிமுறை, ஆசிரி யர் கல்விப்பாடத்திட்டம் ஆகியவற்றில் புதிய மாற்றங்களைச் செய்வதைப்புறந் தள்ளி விட்டு புதிதாக தனி யார் ஆசிரியர் கல்வி நிறு வனங்களுக்கு அனுமதிய ளிப்பது ஆசிரியர் கல்வியின் தரத்தை மேலும் பாழ்படுத்தும். கடந்த இரண்டு ஆண்டு களில் நடைபெற்ற ஆசிரி யர் தகுதித் தேர்வில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான எண்ணிக்கையினரே தேர் ச்சி பெற்றுள்ளது ஆசிரியர்கல்வியின் தரம் தாழ்ந்துள் ளதையேகாட்டுகிறது.

எனவே தமிழக அரசு ஆசிரியர் கல்வியின் தரத்தை உயர்த்த ஆசிரியர் கல்வியை தனியார்மயமாக்குவதையும் வணிகமயமாக்குவதையும் தவிர்க்க வேண்டும். தரமான கல்வியை வழங்க தகுதியு ள்ள ஆசிரியர்களை உருவா க்க தமிழக அரசு நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்விமேம் பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு. மூர்த்தி கேட்டுக் கொண்டி ருக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி