மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங், கட்-அஃப் மதிப்பெண் எடுத்ததில், நாமக்கல் முதலிடம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2014

மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங், கட்-அஃப் மதிப்பெண் எடுத்ததில், நாமக்கல் முதலிடம்.


தமிழக அளவில், நாமக்கல் மாவட்டத்தில் படித்த மாணவர்கள், 2,626 பேர் சென்டம் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளனர். மேலும், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங், கட்-அஃப் மதிப்பெண் எடுத்ததில், நாமக்கல் முதலிடம் பெற்றுள்ளதாக, கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை பட்டியலில் தொடர்ந்துவந்த நிலையில், நேற்றைய ப்ளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவில் மூன்றாம் இடத்திற்குசென்றனர். ஆனால், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பில், கட்-அஃப் மதிப்பெண்ணில் தொடர்ந்து முதலிடம் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் படித்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவரில், கணிதத்தில் 820 பேர், வேதியியலில் 609 பேர், இயற்பியலில் 739 பேர், உயிரியலில் 228 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸில் 155 பேர், பொருளாதாரத்தில் 19 பேர், கணக்குபதிவியலில் 29 பேர், வணிக கணிதத்தில் 5 பேர், என, 2,626 பேர், 200க்கு 200 மதிப்பெண் பெற்று, சென்டம் சாதனை படைத்தனர். மருத்துவம் அல்லது இன்ஜினியரிங் படிப்பில் சேர், கட்-அஃப் மதிப்பெண் கணக்கெடுப்பில், கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், மனையியல், சித்தா, நர்சிங், உயிரிவேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடத்தில், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள், ஆண்டு தோறும் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் மாணவர், எத்தனை பேரை, அதிக கட்-அஃப் மதிப்பெண் எடுக்க வைத்து அனுப்பி வைத்தோம் என்பதையே சாதனையாக காட்டி வருகின்றனர். அந்த வகையில், நேற்று வெளியிட்டப்பட்ட தேர்வு முடிவில், மாநில அளவில், 2,226 மாணவர் சென்டம் மதிப்பெண் எடுத்துள்ளதால், நாமக்கல் மாவட்டமே வழக்கமாக முந்தியுள்ளது.

மேலும், கட்-அஃப் தேவையான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நாமக்கல்லில் படித்தவர் அதிகமாக உள்ளனர். தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள், மருத்துவ மற்றும் இன்ஜினியரிங் மாணவரை உருவாக்க, கட்-அஃப் மதிப்பெண் எடுக்க வைப்பதை முக்கியமாக கருதுகின்றனர். அதனால், தற்போதை முடிவும் அதிகரித்துள்ளது என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி