சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2014

சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது.


சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந்தாது .
ஆர்.டி.இ., சட்டம் மற்றும் அதன் கீழ், மாணவர் சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது ஆகியவற்றை எதிர்த்து, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில்,"அரசு நிதி உதவி பெறும் மற்றும் நிதி உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களை, ஆர்.டி.இ., சட்டம், கட்டுப்படுத்தாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில், அரசு உதவி பெறும், 499 சிறுபான்மை பள்ளிகள், உதவிபெறாத, 609 சிறுபான்மை பள்ளிகள் என, மொத்தம், 1,108 பள்ளிகளுக்கு, ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளாக இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு, ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது என்பதால், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மொத்த இடங்களின் எண்ணிக்கை, கணிசமாக சரியும். சுப்ரீம்கோர்ட் உத்தரவை பின்பற்றும் பள்ளிகள் எவை என்பதை அந்தந்தப் பகுதி பெற்றோர் கண்டறிந்து, தங்கள் குழந்தைகளை சேர்க்க இந்த ஆண்டில் போதுமான கால அவகாசம் இனி கிடைக்குமா என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி