மதுரையில் ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2014

மதுரையில் ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம்.


மதுரையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பக 'ஆன்லைன்' பதிவுகள் தொடர்பாக, ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வுகள் முடிவிற்கு பின், மாணவர்களின் சான்றிதழ்கள், 'ஆன்லைன்' மூலம் வேலைவாய்ப்பக பதிவு மேற்கொள்வது குறித்து இணை இயக்குனர் முருகேசன் விளக்கினார். குறிப்பாக, 'கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பதிவுகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும், பிளஸ் 2 மாணவர் பதிவுக்கு வரும் போது ரேஷன் கார்டுகள் கண்டிப்பாக கொண்டுவர முன்கூட்டியே அறிவுறுத்த வேண்டும்,' என தெரிவித்தார். முதன்மை கல்வி அலுவலர்கள் அமுதவல்லி (மதுரை), வாசு (தேனி), சுகுமார் தேவதாஸ் (திண்டுக்கல்), சிவகாமிசுந்தரி (ராமநாதபுரம்), செந்தில்வேல் முருகன் (சிவகங்கை), செந்தில்குமார் (விருதுநகர்), ஜெயகண்ணு (நெல்லை) மற்றும் கணினிப் பிரிவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி