புகையிலை நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை -தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2014

புகையிலை நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை -தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு.


புகையிலை நிறுவனங்கள் நடத்தும் எந்த போட்டியிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடிஉத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக் குவரத்து விதிகள், எய்ட்ஸ் நோய் தடுப்பு உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப் புணர்வு நிகழ்ச்சிகளும், போட்டி களும் நடத்தப்படுவதும் வழக்கம்.விழிப்புணர்வு தொடர்பான பேரணிகள் மற்றும் ஊர்வலங்களில் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொள்வார்கள். அதேபோல், இதுகுறித்த போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுவோருக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் சார்பில் பரிசுகள், பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு தடை இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச் சிகளுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஸ்பான்சர் செய் வது வழக்கம். விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்படும் போட்டி களுக்கு பரிசுகளையும் அந்த நிறுவனங்கள் வழங்கிவிடும். இந்த நிலையில், புகை யிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை (பீடி, சிகரெட், பான்பராக், குட்கா, கான்ஸ், மாவா) தயாரிக்கும் நிறுவனங் களால் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை வாங்கவும், அந்த நிறுவனங்கள் நடத்தும் எந்த விதமான போட்டியிலும் பங்கேற் கவும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. கல்விஅதிகாரிக ளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:- இந்திய புகையிலை நிறுவனம் (ஐடிசி) நிறுவனத்தால் பள்ளிகளில் போட்டிகளில்நடத்துவதையும், அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசு பொருட்களையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாவட்ட அளவிலோ அல்லது ஒன்றிய அளவிலோ புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட் கள் பயன்படுத்தும் நிறுவனங்கள் நடத்தும் எந்தவிதமான போட்டி களிலும் மாணவர்களை பங்குபெற அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. இதுதொடர்பான அரசு வெளி யிட்ட வழிகாட்டி நெறிமுறை களை பின்பற்றுமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி