தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. தனியார் பள்ளிகளையே நாடுகிறார்கள்.
அரசு பள்ளிகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமல் வகுப்புகள் குறைக்கப்படுகின்றன. பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம், சமச்சீர் கல்வித் திட்டம் முறையாக அமல்படுத்தப்படாததால், அரசு பள்ளிகளில் கல்வித் தரம் உயரவில்லை. மாறாக, தனியார்பள்ளிகளில் கல்வித் தரம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சமச்சீர் கல்வி புத்தகங்களை தவிர பாடத்திட்டத்தில் சேர்க்காமல் தனியாக சில புத்தகங்களை கற்பிக்கிறார்கள். மேலும், ஏராளமான மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வியை தவிர்ப்பதற்காக மத்திய கல்வி திட்டத்திற்கு(சிபிஎஸ்இ) மாறி வருகின்றன.அதே போல், கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும் என்பதற்காக, தொழிற்கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கே நுழைவுத் தேர்வு நடத்துகின்றனர். கோவையில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ பள்ளியிலேயே நுழைவுத் தேர்வு நடத்தியுள்ளனர்.இது பற்றி முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் போய், அவர் அந்த பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.அடுத்ததாக, கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.
அவையும் பல பள்ளிகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும்,தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கல்வி கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் அவற்றை விட அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதே போல், கட்டண விகிதங்களை தகவல் பலகையில் எழுதி வைப்பதும் இல்லை.ஆனால், இதையெல்லாம் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை உள்பட பல குறைபாடுகள் உள்ளதால், கல்வித் துறையால் சரியானநடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
எனினும், கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாக பள்ளி கல்வி துறை முறையாக திட்டமிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளும்பட்சத்தில் ஜூன் மாதத்தில் பெற்றோர்களின் கவலைகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி